• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2026ல் தமிழகத்தில் எதிர்கட்சிகள் இல்லையென்ற நிலையை உருவாக்குவோம், அண்ணாநகர் பகுதி திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

policeseithitv by policeseithitv
December 25, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
2026ல் தமிழகத்தில் எதிர்கட்சிகள் இல்லையென்ற நிலையை உருவாக்குவோம், அண்ணாநகர் பகுதி திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி,

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதி திமுக செயற்குழு கூட்டம் தனியார் மஹாலில் பகுதி செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் வரும் 29, 30, ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார். 29ம் தேதி டைட்டல் பார்க் திறப்பு கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடைபெறுகிறது. 30ம் தேதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விரிவாக்க திட்டத்தை துவக்கி வைக்கிறார். டைட்டல்பார்க் திறப்பின் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது போல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பெற்றோர்களுக்கு சுமை குறைந்துள்ளது. மாணவிகள் படிப்பின் மூலம் அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு தொடர்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஓவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து மூன்றரை ஆண்டுகாலம் திமுக ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை செய்து வருகிறார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 400 கோடிக்கு மேல் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்டதை போன்ற மழை பாதிப்புகள் இந்த ஆண்டு ஏற்படவில்லை. அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் முறையாக செயல்படுத்தவில்லை. அந்த பாதிப்பை எல்லாம் உணர்ந்த திமுக அரசு மக்களுக்கான பணிகளை முழுமையாக செய்து வருகிறது. தொடர்ந்து சாலை கால்வாய் என அனைத்து பணிகளும் நடைபெறும் 16, 17, 18 ஆகிய வார்டு பகுதிகளில் தேங்கிய மழை நீரையும் பல்வேறு வழித்தடங்கள் மூலம் மின்மோட்டார்கள் மூலமும் அகற்றப்பட்டன. பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதன் மூலம் பல்வேறு தொழில்களை செய்து பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். தற்போது எல்லாத்துறையிலும் வளர்ச்சியடைந்த மாநிலமாக திகழ்கிறது. 2030ல் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியல்களில் இடம் பெறும். 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். நாம் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகள் உள்பட 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். எதிர்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம், அதற்கு அனைவரும் சபதம் ஏற்று, இப்போதிலிருந்தே களப்பணியாற்றுங்கள் என்று பேசினார்.

கூட்டத்தில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச் செயலாளர் கனகராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், அயலகஅணி அமைப்பாளர் அசோக், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வின், சங்கரநாராயணன், வட்டச் செயலாளர்கள் செந்தில்குமார், பாலகுருசாமி, பொன்னுச்சாமி, பத்மாவதி, சுரேஷ், பொன்பெருமாள், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், கண்ணன், ஜான், கந்தசாமி, மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்த சேகர், மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, இலக்கிய அணி தலைவர் சக்திவேல், வட்ட பிரதிநிதி பாஸ்கர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் அந்தோணிராஜ், வார்டு நிர்வாகிகள் சுந்தர்ராஜன், கார்த்திகேயன், நாராயணராஜ் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு கடந்த ஆண்டு போல் 5 ஏக்கர் என்ற வரம்பு நிர்ணயம் செய்யாமல் விதிகளை தளர்த்தி பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை

Next Post

நாலுமாவடியில் 3ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து: சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்!

Next Post
நாலுமாவடியில் 3ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து: சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்!

நாலுமாவடியில் 3ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து: சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In