• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு – செயல்வீரர் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் சந்திரன் வாக்குறுதி

policeseithitv by policeseithitv
March 20, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு –  செயல்வீரர் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் சந்திரன் வாக்குறுதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், SDPI மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கனி பேலஸ் திருமண மகாலில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என
தேமுதிக செயல்வீரர் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் SSSSU. சந்திரன் வாக்குறுதி அளித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் SDPI மற்றும் கூட்டணி கட்சி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தேமுதிக வர்த்தக பிரிவு மாநில நிர்வாகியாக பணியாற்றிவந்த தூத்துக்குடி கடம்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சந்திரன் அவர்கள் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு
தேமுதிக வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவித்தார்கள். தேமுதிக வேட்பாளராக சந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே தேமுதிக நிர்வாகிகள்
அமமுக நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கூட்டணி கட்சிகள் இந்த தூத்துக்குடி தொகுதியை தமது கூட்டணி கட்சியினர் முயற்சியினால் கைப்பற்றிய ஆகவேண்டும் என தேர்தல் களத்தில் அதிரடியாக இறங்கினார்கள் இந்நிலையில் நேற்று தொண்டர்கள் படைசூழ நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்து பல்வேறு முக்கிய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து நேற்று தேமுதிக வேட்பாளர் சந்திரன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த அன்றைய தினமே மாலை 6 மணிக்கு மாபெரும் செயல்வீரர் கூட்டத்தை இந்த கூட்டணியினர் நடத்தினார்கள்

இந்தக் கூட்டம் மாநாடு போல் போல் காட்சியளித்தது. தேமுதிக ,அமமுக, மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது கட்சி கொடியுடன் செயல்வீரர்கள் கூட்டத்தில் பெருமளவில் எழுச்சியுடன் பங்கேற்றனர் .இந்த கூட்டத்திற்கு
தேமுதிக தூத்துக்குடி சட்ட மன்ற பொறுப்பாளர் வர்த்தக பிரிவு மாநில நிர்வாகி அழகர்சாமி அவர்கள் தலைமையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் SSSU சந்திரன் அவர்கள் முன்னிலையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது . அந்தக் கூட்ட

 

த்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைப்புச் செயலாளர் ஹென்றி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், கூட்டுறவு வங்கி தலைவர் எட்வின்பாண்டியன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர், மாநில மகளிர் அணி நிர்வாகி சண்முக குமாரி, மாவட்ட மகளிரணி நிர்வாகி ராமேஸ்வரி, SDPI மாவட்டச் செயலாளர் அஜிஸ்
மற்றும்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், SDPI , வட்டக் கழக செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரும் திரளானோர் பங்கேற்றனர் .

இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக மாவட்டச் செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளருமான சந்திரன் அவர்கள் பேசியதாவது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் ஆமை வேகத்தில் இருந்து வருகி

 

றது தூத்துக்குடியை சிங்கப்பூராக மாற்றுவேன் என தெரிவித்த அவர்கள் இன்றுவரை தூத்துக்குடி பகுதியை எந்த நிலைமையில் வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் சிங்கப்பூர் போல் மாற்றம் செய்ய இல்லை என்றாலும் தூத்துக்குடி ஒரு சிறந்த சிட்டியாக மாற்ற முயற்சிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து விடுகிறார்கள். நான் இந்த கூட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள இளைஞர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு தொடர்ந்து வழங்குவேன் என உறுதியளித்தார் மேலும் விவிடி மேம்பாலம் உள்ளிட்ட போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பல்வேறு திட்டங்களை முன்பிருந்த சட்டமன்ற

 

உறுப்பினர்கள் துரிதமாக செய்யாததால் மேம்பாலம் திட்டம் கிடப்பில் கிடக்கிறது தேமுதிக வேட்பாளரான என்னை நீங்கள் வெற்றிபெற செய்யும் பட்சத்தில் விவிடி மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய பணிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் மேலும் இந்தத் தொகுதியின் வளர்ச்சிப் பணிக்கு முழுமையாக என்னை ஈடுபடுத்து வேன் என வேட்பாளர் சந்தி

 

ரன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் மிக உற்சாகமாகவும் எழுச்சியாக காணப்பட்டது.

 

 

Previous Post

ஆண்டுதோறும் 20 மாணவர்களுக்கு இலவச கல்வி – வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு உறுதி அளித்தார் ஊர்வசி அமிர்தராஜ்

Next Post

காரைக்குடி தொகுதியில் 9 பேர் வேட்புமனு தாக்கல் தள்ளுபடி

Next Post
காரைக்குடி தொகுதியில்  9 பேர் வேட்புமனு தாக்கல் தள்ளுபடி

காரைக்குடி தொகுதியில் 9 பேர் வேட்புமனு தாக்கல் தள்ளுபடி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In