மதச்சார்பற்ற திமுக கூட்டணியில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான தெற்கு மாவட்டத் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ், வேட்புமனுத் தாக்கல் செய்ய திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள தேர்தல் அதிகாரியான ஜீவ ரேகாவிடம் காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, உதவித் தேர்தல் அதிகாரி கோபால கிருஷ்ணன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உடனிருந்தனர்.பின்னர் ஊர்வசி அமிர்தராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மக்களும் மாற்றத்தை விரும்புகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என விரும்புவதால் ஏப். 6ல் நடைபெறும் தேர்தல் தமிழகத்திற்கு திருப்புமுனையாக அமையும்.நான் வெற்றி பெற்றால் 20 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச கல்வி தருவேன். விவசாயிகள் உள்ளிட்ட தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்துக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன்’’ என்றார். பின்னர் அவர், கொங்கராயகுறிச்சி, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சிகளில் வைகுண்டம் வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லக்கண்ணு, வட்டார பொருளாளர் சந்திரன், வக்கீல் பிரிவு பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர் அலங்கார பாண்டியன், தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப் பெருமாள், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றியச் செயலாளர்கள் கருங்குளம் இசக்கி பாண்டியன், வைகுண்டம் கொம்பையா பாண்டியன், திமுக நகரச் செயலாளர் பெருமாள், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றியச் செயலாளர் மாசான செல்வம், முன்னாள் திமுக நகர பொருளாளர் பொன்ராஜ், திக ஒன்றியத் தலைவர் திருமலைகுமரேசன், பேரூர் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ், சிவாஜி மன்றம் முருகேசன், மதிமுக தூத்துகுடி மாவட்ட துணைச் செயலாளர் சிவாஞானவேல், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் நடராஜன், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நம்பிராஜன், மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ராமானுஜம், வைகுண்டம் காங்கிரஸ் நகர தலைவர் சித்திரை, காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர்கள் சீனி ராஜேந்திரன், பிச்சையா, ராஜவேல், புகாரி, நிலமுடையான், ரமேஷ், சிவா , மாரிகணேஷ், பழனி, காங்கிரஸ் தெற்கு மாவட்ட வக்கீல் அணி தலைவர் பெலிக்ஸ், கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார், திமுக மாவட்டப் பிரதிநிதி ஜெரால்டு, தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் விஜயன், நகரச் செயலாளர் மணிமுருகன், ஆழ்வார்திருநகரி வட்டாரத் தலைவர் கோதண்டராமன், ஊடகப் பிரிவு தலைவர் மரியாஜ் வட்டாரத் தலைவர் சபாபதி, நகர தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்


