தூத்துக்குடி.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரும், 18வது வட்ட அதிமுக செயலாளருமான முருகன் – பொன்மாரி மகனும், தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளருமான பில்லா விக்னேஷ், மதுரை நேரு நகர் சுப்பிரமணி – இசக்கியம்மாள் மகள் மீனா ஆகியோரது திருமணம் தூத்துக்குடி பெருமாள் கோவிலில் வைத்து நடைபெற்றது.
அதன் பின்னர் மில்லர்புரம் ரூபவதி பேலஸில் வைத்து நடைபெற்ற வரவேற்பு விழாவிற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்து மணமக்களை வாழ்த்தி பேசுகையில்: கட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் முருகனும் அவரது மகன் விக்னேஷும் சிறப்பான முறையில் கொள்கை பிடிப்போடு பணியாற்றி வருகிறார்கள். குடும்பமாக கணவன்-மனைவி வாழ்ந்து 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதன் வெற்றிக்கு துணையாக இருக்க வேண்டும். மக்கள் எல்லோரும் அதிமுக ஆட்சியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அந்த ஆட்சி அமைந்தால் தான் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பேசினார்.
முன்னாள் எம்.பி. நட்டர்ஜி, முன்னாள் எம்எல்ஏ மோகன், மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மாநில அதிமுக நிர்வாகிகள் சுதா கே பரமசிவம், சின்னதுரை, ஹென்றி, பிரபு, பெருமாள்சாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் பெருமாள், பிரபாகர், ராஜா, நடராஜன், திருச்சிற்றம்பலம், டைகர் சிவா, அலெக்ஸ்ஜீ, சரவணப் பெருமாள், முனியசாமி, வலசை வெயிலுமுத்து, நிலா சந்திரன், பூர்ணராஜா, ஜீவா பாண்டியன், மூர்த்தி, மனுவேல்ராஜ், சத்யா லெட்சுமணன், ராஜேந்திரன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸ், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், செண்பக செல்வன், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், விஜயகுமார், தாமோதரன், ராஜ் நாராயணன், லெட்சுமண பெருமாள், வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளை விநாயகம், ரவீந்திரன், சுகந்தன் ஆதித்தன், வட்ட செயலாளர்கள் சொக்கலிங்கம், அருண்குமார், முருக ஹாசன், கொம்பையா, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, தொழிலாளரணி அமைப்பாளர் முருக இசக்கி, வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வின், சங்கரநாராயணன், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், கவுன்சிலர்கள் கந்தசாமி, ராமர், கனகராஜ், வட்ட செயலாளர்கள் பாலகுருசாமி, கங்கா ராஜேஷ், சதீஷ்குமார், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் பெருமாள்சாமி, மதிமுக ஒன்றிய செயலாளர் சரவணன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் குமார முருகேசன், தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன், யாதவ மகாசபை மாநில துணைத்தலைவர் பொட்டல்துரை யாதவ், பிஜேபி வழக்கறிஞரணி செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செங்குட்டுவன், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் அகமது இக்பால், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், ஓ.பி.எஸ். அணி மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி பாண்டியன், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் தொல்காப்பியன், தொழிலதிபர் மாடசாமி, அஜித் ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், பொருளாளர் சந்தனராஜ், தமிழக வெற்றிக்கழக நிர்வாகி எஸ்.ஜே.சுமன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சின்னதுரை, ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி, ஆஷா சண்முகநாதன், உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

