தூத்துக்குடி,டிச, 5
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்து உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி. த செல்ல பாண்டியன் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக மாநில வர்த்தக அணி சாா்பில் முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் தலைமையில் அதிமுகவுணர் இன்று காலை பழைய பேருந்து நிலையம் அருகில் மற்றும் டூவிபுரம் அண்ணாநகர் சந்திப்பு ஆகிய இடங்களில் அலங்காிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மாியாதை செய்தார். பின்னர் உறுதி மொழி எடுத்துக் கொண்ட சி. த செல்லப்பாண்டியன் தீயசக்திகளின் ஆட்சியை விரட்டுவோம். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதிமொழி ஏற்போம் என்று சி.த செல்லப்பாண்டியன் உறுதிமொழி வாசிக்க அதனைத் பின்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் கோஷமாக உறுதிமொழி எடுத்தனர்.


இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கிருஷ்ண ராதா கிருஷ்ணன், மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமை்பபாளா் சேகா், மாவட்ட வா்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ராஜகோபால், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், துணை தலைவர் ரத்தினம், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன், ராஜாராம், தெற்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்ரமணியன், டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை ராஜா, அருண்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், முன்னாள் வட்ட செயலாளர்கள் ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், கருப்பசாமி, அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், கருப்பசாமி, சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ஜெயக்குமார், முருகன், ராஜ்குமார் மற்றும் சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோணிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், சிவசாமி, வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ், மகளிரணி பாலம்மாள், முத்துமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

