தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி ேமயா் ஜெகன் பொியசாமி தீர்வு கண்டு வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம் மற்றும் வட்டக் கோயில் ரவுண்டானா பகுதியில் உள்ள பாதாள சாக்கடை நீர் வெளியேற்றும் அறைகளை மேயர் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தொடர்சியாக மின் மோட்டார்களை இயக்குமாறு கூறியுள்ளார்.
பின்னர் லயன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் வடிகால் வசதி மற்றும் நியாய விலை கடையினை புனரமைப்பு செய்து தருமாறு வந்த கோரிக்கையினை அடுத்து அந்த பகுதியினையும் மேயர் ஜெகன் ெபாியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்த தேவையில்லாதோர் வைத்திடுக தேவைப்படுவோர் எடுத்திடுக என்ற ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் மாநகர மக்கள் தங்கள் பயன்படுத்திய அல்லது புதிய துணிகளையோ, பொருட்களையோ, புத்தகங்களையோ இங்கு கொண்டு வந்து கொடுத்தால் அதை தேவை உள்ளோர் எடுத்துக் கொள்ளும்படி மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் மாநகர மக்கள் அனைவரும் பங்கு பெறும்படி மேயர் ஜெகன் பொியசாமி கேட்டுக்கொண்டார்.
பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எந்த பணியும் மக்களுக்காக நடைபெறவில்லை. அதனால் ஏற்பட்ட பல சோதனைகளை மக்கள் சந்தித்து காரணத்தால் திமுகவிற்கு ஆதரவாக வாக்களித்து தமிழக முதலமைச்சராக முக.ஸ்டாலினை ேதா்ந்தெடுத்தனர். அதன்பின் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திமுகவிற்கு அமோக ஆதரவை கொடுத்ததின் மூலம் பொறுப்பேற்ற 3 ஆண்டு காலத்தில் புதிதாக 80 சதவீதம் கால்வாய் சாலை வசதி என முழுமையாக பாராபட்சமின்றி செய்துள்ளோம். புதிய பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் மன மகிழ்ச்சிக்கேற்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு அதை ஓன்றன்பின் ஓன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறோம் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் எந்த பகுதியிலும் மழைநீர் தேங்காதவண்ணம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் சில பகுதிகளில் காலி மணைகளில் தண்ணீர் தேங்குவதால் அப்பகுதி பாதிக்கப்படுகிறது. அதையும் முறைப்படுத்தி மின்மோட்டார்கள் மூலம் கடலுக்கு செல்லும் வகையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதராத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. சாலைகளில் சிறிய பள்ளங்கள் அனைத்தும் பேட்ஜ் ஓர்க் செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் பொதுமக்கள் ஓத்துழைப்பு அவசியம் தேவை என்பதை நாங்களும் உணர்ந்து பொதுமக்களோடு பணியாற்றுகிறோம். என்று கூறினார்.
ஆய்வின் போது வட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், வட்ட பிரதிநிதி புஷ்பராஜ், மாநகர சுற்றுசூழல் அணி தலைவர் வினோத், கவுன்சிலர் ரெக்ஸ்லின் மற்றும் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா் உள்பட பலர் உடனிருந்தனர்.

