தூத்துக்குடி
அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் விளையாட்டு துறையில் ஊக்குவிக்கும் வகையில் ஓன்றிய அரசும் தமிழக அரசும் மாணவ மாணவிகளை ஊக்குவித்து வருகின்றனர். ஆரோக்கிய மான வாழ்க்கைக்கு தற்போது உள்ள சூழ்நிலையில் சிறியவர் முதல் பொியவா் வரை எல்லோருக்கும் ஏதாவது ஓரு விளையாட்டுகள் கலைகள் நடைபயிற்சிகள் என அவசியம் தேவைப்படுகிறது. அதனை உணர்ந்து பல்வேறு தரப்பினர் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் பள்ளிப்படிப்பை தொடங்கிய காலத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டும் மாணவ மாணவிகளை ஆசிாியர்களும் விளையாட்டு மேம்பாட்டு துறை அலுவலர்களும் ஊக்கப்படுத்தி மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்து சாதனைகளை பெருகின்றன.
இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் பல மாணவ மாணவிகள் அரசுத்துறை சார்ந்த படிப்புடன் கூடிய மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கும் தேர்வாகி வருகின்றன. தமிழக அரசை பொறுத்தவரை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதிஸ்டாலின் இருந்த காலம் முதல் தற்போது துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் தமிழகத்தில் எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு ஊக்குவித்து வருகிறார். மாநில அளவில் தேர்ச்சி பெறும் வீரர்களுக்கு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகள் மட்டுமின்றி உலக அளவில் நடைபெறும் போட்டிகளுக்கும் தேவையான உதவிகளை அரசின் சார்பில் செய்து வருகிறார்.
இந்நிலையில் பழமையான விளையாட்டு போட்டியான சிலம்பம் போட்டி பெங்களுாில் அகில இந்திய அளவில் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தை சோ்ந்த உக்கிரபாண்டி இசக்கிராணி தம்பதியினர் மகள் மகேஷ் நாச்சியார். கலந்து கொண்டு தனது திறமையின் மூலம் இந்தியாவில் முதலிடம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளாா்.

