• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்களை துணை மேயர் ஜெனிட்டா பெற்றுக் கொண்டார். 

policeseithitv by policeseithitv
November 20, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்களை துணை மேயர் ஜெனிட்டா பெற்றுக் கொண்டார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

கடந்த ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு துணை மேயர் ஜெனிட்டா தலைமை வகித்தாா். மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை தொடங்கி வைத்து துணை மேயர் ஜெனிட்டா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டாா். உதவி ஆணையர் வெங்கட்ராமன், கையெழுத்திட்டு சில உத்தரவுகளை பிறப்பித்தாா். தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஓரு புறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம் முகவாி மாற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அதனடிப்படையில் இந்த முகாமில் கொடுக்கப்படும் ஓவ்வொரு மனுக்களையும் முறையாக பதிவு செய்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமீபத்தில் அண்ணா பேருந்துநிலையத்தில் விதிமுறைகளை மீறயதாக சீல் வைக்கப்பட்ட கடை உாிமையாளா்கள் வீதிமுறைகளை இனி மீறாத வகையில் செயல்படுவோம் என உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டு அபதார தொகை கட்டுவதாக உறுதியளித்து மனு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ரெக்ஸின், தனலட்சுமி, மாியகீதா, மும்தாஜ், ராமுஅம்மாள், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், இர்வின் ெஜபராஜ், நகர்நல அலுவலர் சூர்யபிரகாஷ், இளநிலை பொறியாளர் பாண்டி, குழாய் ஆய்வாளர் மாாியப்பன், வட்ட செயலாளர் கதிரேசன், வணிகா்கள் சங்க தலைவர் ஜவஹர், செயலாளர் தெர்மல்ராஜா, அண்ணா பேருந்துநிலைய வியாபாாிகள் சங்க தலைவர் அன்னராஜ், செயலாளர் பாலமுருகன், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

கலைஞர், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு ஐ.என்.டி.யு.சி புகழாரம்

Next Post

அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை

Next Post
அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை

அகில இந்திய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த மாணவி மகேஷ் நாச்சியார் சாதனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In