தூத்துக்குடி.
முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாளையொட்டி ஐ.என்.டி.யு.சி அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் போல்பேட்டை ஐ.என்.டி.யு.சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு ஐ.என்.டி.யு.சி அமைப்பு சாரா தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜு தலைமை தாங்கினார். இதில் இந்திராகாந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஐ.என்.டி.யு.சி அமைப்பு சாரா தொழிற்சங்க செயலாளர் ராஜு பேசுகையில்: மறைந்த இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் தேசிய அளவில் அமைப்புசாரா தொழிற்சங்கத்தின் மூலம் உறுப்பினர்கள் பலனடைய வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த கலைஞர் ஆட்சிக் காலத்தில் 21 வாரியங்கள் உருவாக்கப்பட்டு, அதை முறையாக செயல்படுத்தி அதில் உள்ள உறுப்பினர்கள் பலனடைந்து வந்தனர்.
இந்நிலையில் உப்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மழைக்காலங்களில் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டுமென்று கடந்த காலத்தில் கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உப்பளத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நாங்கள் வைத்த அந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கனிமொழி எம்.பி.யும், அமைச்சர் கீதாஜீவனும் இணைந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் தற்போது நமது மாவட்டத்தில் 2800 பேர்கள் பயனடைகின்றனர். இதுபோன்ற பல நல்லத்திட்டங்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் பயனடைந்து வருகின்றனர். திமுக ஆட்சிக்காலத்தில் தான் இதுபோன்ற நன்மைகள் எல்லோருக்கும் கிடைக்கின்றனர். அந்த வகையில் துணை நின்ற கனிமொழி எம்.பி.க்கும், அமைச்சர் கீதாஜீவனுக்கும் எங்கள் தொழிற்சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பேசினார்.
ஐ.என்.டி.யு.சி அமைப்பு சாரா தொழிற்சங்க மாநில செயலாளர் ராஜு, சுடலை, பாலகிருஷ்ணன், ராஜசேகரன், பரமசிவம், முருகராஜ், இந்திராகாந்தி, சிந்தாமணி, பழனியம்மாள், கற்பகம், சூலான், குமுதகலா, ராஜலெட்சுமி உள்பட காங்கிரஸ் கட்சியை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

