தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மார்க்கன்டேன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னிலையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 2026ல் நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கிய கழகத்தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியாருக்கு நன்றியை தொிவித்துக்கொள்வதோடு கடந்த ஆண்டு வடக்கு மாவட்டத்தில் பிறந்தநாள் கொண்டாடியதை விட அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்றையதினம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மிகப்பொிய வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு முன்னோட்டமாக 29ம் தேதி வாக்காளர் பட்டியல் வௌியிடப்படுகிறது. அதை அனைத்து கிளைச்செயலாளர்களுக்கும் ஓன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் வழங்கி அதன் பின் வாக்களார் சோ்ப்பு நீக்குதல் உள்ளிட்ட பணிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் நம்வீட்டு குழந்தைகளை வாக்காளர் பட்டியல்களில் சேர்க்க வேண்டும் அதில் நம்கட்சியை சார்ந்தவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். யார் ஓருவர் மொத்தமாக சேர்ப்பு பட்டியல் கொடுத்தாலும் அதை கண்காணிக்க வேண்டும். தமிழக அரசின் மீது உங்கள் பகுதியில் தேவையற்ற விமர்சனங்களை பரப்பி வரும் எதிர்கட்சிகள் குறித்த தகவல்களை உடனடியாக எனக்கு தொிவிக்க வேண்டும் அப்போது தான் அந்த பகுதியில் அதற்கு தகுந்தாற்போல் நாம் பதிலடி கொடுக்க முடியும் எதிர்வரும் தேர்தலில் எல்லோரும் இணைந்து ஓற்றுமையாக பணியாற்றி இரண்டாவது முறையாக கழகத்தலைவரை முதலமைச்சராக்க சபதம் ஏற்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளரும் மாநில நெசவாளர் அணி செயலாளருமான பெருமாள், கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளரும் மாநில விவசாய அணி இணைச்செயலாளருமான கணேசன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், ஓன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் பேசினார்கள்.
பின்னர் முரசொலி செல்வம், மறைவிற்கு இரங்கல் தொிவித்து ஓருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் 3 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், துணைமேயர் ஜெனிட்டா, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் பிரமிளா, கனகராஜ், பொருளாளர் அனந்தையா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஓன்றியகுழு தலைவர் கஸ்தூாிதங்கம், மாவட்ட கவுன்சிலர் தங்கமாாியம்மாள், நவமணி, ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், நவநீதக்கண்ணன், சின்ன பாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னமாரிமுத்து, ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, காசிவிஸ்வநாதன், பேரூர் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், சுரேஷ் கண்ணன், பாலகுமார், வேலுச்சாமி, மருதுபாண்டியன்,மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், இராஜா, மாநில பேச்சாளர் சரத்பாலா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராதாகிருஷ்ணன், ராமர்,பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன். ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, பொறியாளர் அணி தலைவர் பழனி, அமைப்பாளர் அன்பழகன், மருத்துவஅணி தலைவர் அருண்குமாா், வக்கீல் அணி அமைப்பபாளர் குபேர் இளம்பாிதி, மீனவரணி அமைப்பாளர் அந்ேதாணிஸ்டாலின், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், அயலக அணி அமைப்பாளர் அசோக், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜன், நிக்கோலாஸ்மணி, குருராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப். சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் ரூபராஜா, சுற்்றுச்சூழல் அணி அமைப்பாளர் சாரதி, துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி. பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பொருளாளர் உலகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், மாாிச்சாமி, நாராயணன், சுரேஷ், கவுன்சிலர்கள் நாகேஸ்வாி, பவாணி, இசக்கிராஜா, மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்: எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அமைச்சர் கீதாஜீவன் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ புகழாரம்
மாா்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில் இந்தியாவில் உள்ள தலைவர்களில் தொிவிக்கும் கருத்துக்கள் பேச்சுக்கள் பொிய அளவில் பேசப்படும். தலைவராகவும் முதலமைச்சராகவும் முக.ஸ்டாலின் விளங்கி வருகிறாா். அவரது ஓவ்வொரு செயல்பாடுகளையும் நடவடிக்ககைளையும் இந்திய தலைவர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. நம்முடைய வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை பொறுத்தவரையில் தலைமை கழகம் தொிவிக்கும் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ளார். குறிப்பாக தேர்தல் பணியாக இருந்தாலும் சாி கட்சி பணியாக இருந்தாலும் சாி முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றுகிறார். இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் நம்மை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். அவரது நடவடிக்கை மூலம் எல்லா பணியும் சிறப்புடன் நடைபெறுகிறது என்று புகழாரம் சூட்டினார்.

