தூத்துக்குடி மாநகரில் உள்ள 200 மாற்றுதிறனாளிகளுக்கு தீபாவளி பரிசாக வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புத்தாடை மற்றும்இனிப்புகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கி கூறுகையில் திமுக தலைவராகவும் தமிழக முதலமைச்சராகவும் பணியாற்றி மறைந்த கலைஞர் ஆட்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி முக்கியதும் வழங்கினார். அதனடிப்படையில் பல்ேவறு வகையில் உங்களது வாழ்வாதாரம் உயர்வதற்கு காரணமாக அமைந்தது. அதன்வழியில் தமிழக முதலமைச்சர் தளபதியாரும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலினும் பணியாற்றிவருகின்றனர். இதையெல்லாம் எண்ணிபார்த்து இனிவரும் காலங்களில் 2026ல் 200 தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும். என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நமக்கு எல்லாம் உத்தரவு பிறப்பித்து அதற்கான பணிகளை தொடர்ந்து பணியாற்ற வேண்டும். என்று கூறியுள்ளார். அதனடிப்படையில் தூத்துக்குடி தொகுதியில் ஆட்சியின் சாதனைகளை எல்லா தரப்பினாிடமும் கொண்டு போய் சேர்த்து அதிகமான வாக்குகளை பெற்றுதருவதற்கு பணியாற்ற வேண்டும். என்று ேகட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், மேகநாதன், மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டச்செயலாளர் பாலகுருசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் கருணா, மணி, மாாிமுத்து, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

