தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரதிபெற்ற சிவன்கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவில் தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி முன்னதாக காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை சிவன்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டம் தலைமையில் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். மேலும் பக்தர்கள் கர கோஷத்துடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் மேயர் ஜெகன்பொியசாமி சிவன்கோவிலுக்குள் சென்று சாமி தாிசனம் செய்து முழுமையாக பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கீழ ரதவீதியில் இருந்து தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. தேருக்கு முன்பாக குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை, தேவராட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்சிகள் நடைபெற்றது. ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர் மோர் விநியோகம் செய்யப்பட்டது. பல்வேறு அம்மன் வேடத்தில் பலர் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் பாகம்பிரியாள் அறக்கட்டளை சார்பில் சிவன் கோவில் அருகில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் ரூக்குமணி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தெப்பக்குளம் மாாியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் சாந்தி ஜெயலட்சுமி மந்திர மூர்த்தி, ஜெயபால் பாலசங்கர், முருகேஸ்வரி, தொழிலதிபர்கள் தெய்வநாயகம், சந்திரசேகரன், பாஸ்கா், முருகன்யாதவ், மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் சுரேஷ்குமார், தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் விக்னேஷ், வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் சரவணபெருமாள், வட்டச்செயலாளர் சொக்கலிங்கம், தலைமை பேச்சாளர் முருகானந்தம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மாவட்ட திமுக பிரதிநிதி சக்திவேல், கலைஇலக்கிய அணி துணைச்செயலாளர் சோமநாதன், வட்ட செயலாளர்கள் கங்காராஜேஷ், சதீஷ்குமாா், வா்த்தக அணி துணைச்செயலாளர் வேல்பாண்டி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் கீதா செல்வமாரியப்பன், தங்கமாாியப்பன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர், திமுக நிர்வாகிகள் மாரிமுத்து, ராஜ்குமாா், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையில் மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் வெங்கட், ஆகியோர் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் 11ம் திருநாளான 29ம் தேதி (செவ்வாய்க் கிழமை) திருக்கல்யான வைபவம் நடைபெற இருக்கிறது.

