கொடைக்கானலில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் என்ற தலைப்பில் போலீஸ் செய்தி வெப் சேனலில் செய்தி வெளியாகியது.
பயணிகள், மற்றும் ‘சப்ல” இளைஞர்களை குறி வைத்து கடந்த சில வாரங்களாக புற்றீசல்போல் அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடக்கும் நிலையில் அப்பாவி சுற்றுலா பயணிகளை மிரட்டி சிலர் பணம் பறிப்பதாக பரபரப்பு எழுந்திருக்கிறது. எனவே அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.



குறிப்பாக கொடைக்கானல்
பஸ் ஸ்டாண்ட். நாயுடுபுரம் வெள்ளையப்பன் தியேட்டர். டெப்போ, கான்வென்ட் ரோடு.
ஹைஸ்கூல் ஆகிய இடங்களில்
ஆயுர்வேத மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்
தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதனை காவல் துறையினருக்கும், ஊடக
துறைகளுக்கும்
பொது மக்கள் சார்பில் புகார் தெவித்து வரும் நிலையில் இது குறித்து
காவல் துறையோ?, ஊடக
துறையோ? விசாரிக்க சென்றால் அங்குள்ள பெண்கள் வைத்து பாலியல் புகார்
கொடுப்போம் என மிரட்டி வருகிறார்களாம். பாலியல் தொழில்
ஈடுப்படும்
நபர்கள் அந்த அளவிற்கு இவர்களது அடாவடி நாளுக்கு நாள் அதிகரித்து,
வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணித்து வருகின்றனர். அதே நேரத்தில் போதைக்கு விருப்பப்பட்டு வரும் பயணிகளை குறி வைக்கும்
மசாஜ் சென்டர்
கும்பல் போதை பொருள் அவர்களுக்கு கிடைக்க வலிவகை செய்து விட்டு தங்களது மசாஜ் சென்டர் பெயரில் நடைபெறும் விபசார
விடுதியில்
போதை ஆசாமி களுக்கும் சிறப்பான விருந்து அளித்து அவர்களிடம் பல்லாயிரம் ரூபாய் அபகரித்து கொள்கிறது மேற்கொண்ட கும்பல்
பல்வேறு மசாஜ் சென்டர்களில் போதைப் பொருட்கள் விற்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும். மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு பாலியல் தொழில் நடக்கும் நிலையில் அப்பாவி சுற்றுலா பயணிகளை மிரட்டி சிலர் பணம் பறிப்பதாக பரபரப்பு எழுந்திருக்கிறது. உளவுதுறை போலீஸ் மூலம்
மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தும் சென்டர்கள் எது என்பதை பட்டியல் எடுத்து கொண்டு ஒரே நேரத்தில் போலீஸ் படைகள் மூலம் சோதனை நடத்தினால் பல வெளிமாநில அழகிகள் சிக்குவது
உறுதி என்கிறார்கள்
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்களை சீரழிக்கும் இந்த கும்பல்களுக்கு தலைவனாக பெங்களூர் சதீஷ், திருப்பூர் குமார், மற்றும் சில மாப்பியாகள் இருப்பதாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளையும்,இளைஞர்களையும் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் நடத்தும் பணம் பறிக்கும் இந்த கும்பல்கள் இடம் இருந்து பாதுகாக்க திண்டுக்கல் எஸ்பி, கொடைக்கானல் டி எஸ் பி இரும்பு கரம் கொண்டு மேற்படி கும்பல்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திண்டுக்கல் சரக டிஐஜி தங்களது தனிப்படை மூலம் கொடைக்கானலில் நடைபெறும் இந்த மசாஜ் சென்டர்கள் நடத்தும் கும்பல்களை கண்காணித்தால் பல்வேறு
திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க பெறும் எனக் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதில் காவல் துறையின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம் என்று செய்தி வெளியிட்பட்டிருந்த நிலையில்
திண்டுக்கல் எஸ். பி. பிரதீப், கொடைக்கானல் டிஎஸ்பி மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் எடுத்து அதிரடி நடவடிக்கையால் தற்போது கொடைக்கானல் முழுவதும் முறைகேடாக அனுமதி இன்றி செயல்பட்ட மசாஜ் சென்டர்கள்
இழுத்து மூடப்பட்டது
முறைகேடான
மசாஜ் சென்டர்கள்.இழுத்து மூடப்பட்ட நிலையில்
சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில்
திண்டுக்கல் எஸ். பி. பிரதீப்,
கொடைக்கானல்
டிஎஸ்பி மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோருக்கு
பாராட்டுக்கள் குவிகிறது. போலீஸ் செய்தி நியூஸ் சேனல் சார்பில் காவல் துறைக்கு ராயல் சல்யூட்..
செய்தி தொகுப்பு
ஆனந்த்.

