தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணப்பெருமாள் கலெக்டர் இளம்பகவத்திடம் அளித்த கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது
ஸ்ரீவைகுண்டம் தாலூகா உட்பட ஸ்ரீமூலக்கரை கிராமம் அதிக விவசாயம் நிறைந்த பகுதியாகும். விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், நெல்விதை, உரங்கள், வாழைக்காய் ஏற்றுமதி போன்ற வகைக்கு அதிகமாக பயன்படுத்த ஸ்ரீமூலக்கரை டூ ஸ்ரீவைகுண்டம் செல்லும் கரை ரோடு மின் விளக்கு வசதி கேட்டு விவசாயிகள் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் சார்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை மேலும் இரவு நேரங்களில் விச பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் நலன் கருதி ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உடனடியாக ஸ்ரீமூலக்கரை டூ ஸ்ரீவைகுண்டம் கரை ரோடு மின்விளக்கு வசதி அமைத்து தர பொதுமக்கள் சார்பாக கலெக்டாிடம் அளித்த கோாிக்கை மனுவில் தொிவித்துள்ளனர்.

