தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைகள் தூத்துக்குடி, எட்டையாபுரம், மற்றும் புதியம்புத்தூர், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் ஆடுகள் வாங்குவதற்கு எட்டையாபுரம் மற்றும் புதியம்புத்தூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி இசிஆர் சாலை கோமஸ்புரம் பகுதியில் நடைபெற்ற திறப்பு விழாவிற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்புரையாற்றினாா்.
இச்சந்தையை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி வைத்து சந்தையை துவக்கி வைத்தார். இதில் தொடர்ந்து ஆட்டு வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சந்தையில் ரூ 8500, ரூ.10,500, ரூ. 11,000 ஆகிய 3 ஆடுகளை (கிடாக்களை) விலைக்கு ஆடுகளை வாங்கி அமைச்சர் கீதாஜீவன் வாங்கி ஆட்டு வியாபாரிகளை உற்சாகப்படுத்தினார். முன்னதாக மரக்கன்று நட்டினார்.

சுமார் ஒன்றரை ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி விளாத்திகுளம் குளத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்தும் வாடகைக்கு வண்டி பிடித்து பிற இடங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய கால சூழல் பண விரையம் ஆகியவை தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது என ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர். முதல் நாளில் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டனர். மேலும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் மட்டுமின்றி திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களுக்கு ஆட்டு இறைச்சி வாங்குவோர் நீண்ட தூரம் செல்லக்கூடிய சூழல் தவிர்க்கப்படும் எனவும் இச்சந்தையில் விரைவில் ஆட்டு வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவுள்ளது என ஆட்டுச் சந்தையின் உரிமையாளர் அம்பாசங்கர் தெரிவித்தார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, கவுன்சிலர் தெய்வேந்திரன், சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் வினோத், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மாநகர இறைச்சி கடை உாிமையாளர்கள் சங்க தலைவர் வேல்சாமி, செயலாளர் பொன்ராஜ், திமுக தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மாாிச்செல்வம், மாணவரணி ரமேஷ், கணபதி நகா் கார்த்திசன், கிளைச்செயலாளர்கள் உலகநாதன், ராமசந்திரன், ஆசைதம்பி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

