சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக கட்சி வேட்பாளர் எச்.ராஜா தலைமையில் தேவகோட்டையில் தேவகோட்டை நகர், தேவகோட்டை ஒன்றியம் ,மற்றும் கண்ணங்குடி ஒன்றிய, அதிமுக, பாஜக ,செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது .
இதில் மத்திய சாலைப் போக்குவரத்து இணைஅமைச்சர் வி.கே.சிங் பேசுகையில் பெண்களைப் பாதுகாக்க அதிமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும், தமிழ் தொன்மையான மொழி, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்றார் திமுகவினர் தங்களுடைய குடும்பத்திற்கு தான் செய்வார்கள் மக்களுக்கு செய்ய மாட்டார்கள் அது அவர்களுடைய சரித்திரத்தை பார்த்தாலே தெரியும் என்றார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் பில்லா கணேசன் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ .சோழன் பழனிச்சாமி, தேவகோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சுந்தரலிங்கம்,ஆவின் சேர்மன் அசோகன்,த.மா.கா.மாநிலச் செயலாளர் துரை கருணாநிதி, பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், அதிமுக மற்றும் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


