தேவகோட்டையில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகள், நாலரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (44). காரைக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறார், இவரும், இவரது மனைவி கண்மணியும் துக்க நிகழ்வுக்காக காலை 9 மணிக்கு வெளியூருக்குச் சென்றிருந்தனர், பின்னா், வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு வீடு திரும்பியுள்ளனா்.
அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 35 பவுன் நகைகள், நாலரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.6 லட்சம் பணம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், தேவகோட்டை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இச்சம்பவம் குறித்து தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

