தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி உதவி ஆணையர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்்றினார்.
பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவாி மாற்றம் புதியகுடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மனுக்களை பெற்றுக்கொண்ட பின் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் அவரது உத்தரவிற்கிணங்க மழை நீர் தேங்கிய பகுதியில் புதிய கால்வாய் பணிகள் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இந்த மண்டலத்தில் நடைபெறுகிறது.
ஏற்கனவே நடைபெற்ற மண்டலத்தில் 259 மனுக்கள் பெறப்பட்டு அதில் 205 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது மீதியுள்ள 54 மனுக்களில் மின்வாாியம் மற்றும் சுகாதாரதுறை உள்ளிட்ட சில துறைகளை சாா்ந்ததாகும் அதிலுள்ள குறைகள் தீா்க்கப்பட்டு அதையும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும். கோரம்பள்ளம் 24 மடை மழைகாலங்களில் திறக்கப்பட்டால் உப்பாற்று ஓடை பகுதியில் உள்ள 170 மீட்டர் அகலம் கொண்ட பகுதி வழியாக 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று தண்ணீர் கடலுக்கு செல்கிறது. முள்ளகாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வழித்தடம் சீரமைக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி சாலை மார்க்கத்தில் வந்த தண்ணீர் கலெக்டர் அலுவலுகத்திற்குள் புகுந்தது. இது ேபான்று ஊருக்குள் தண்ணீர் வராத வகையில் பல்ேவறு பணிகளை முறைப்படுத்தியுள்ளோம். மிகப்பொிய ஆன்மீக தலமான திருச்செந்தூருக்கு விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு பக்தர்கள் பாதசாாிகளாக வருபவர்களுக்கும் வாகனங்களில் வருபவர்கள் சற்று ஓய்வு எடுக்கும் வகையில் ஆண்பெண் என இருவருக்கும் ஏற்றவாறு நவீன வசதிகளுடன் இந்த பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதில் சற்று இளைப்பாறி கொண்டு ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளலாம். பல்வேறு வகையில் முன்னெச்சாிக்கை நடவடிக்கையை முழுமையாக செய்துள்ளோம். தேவையான அனைத்து பகுதிகளுக்கும் முழுமையான கட்டமைப்புபணிகளை நிறைவேற்றுவோம் என்று பேசினார்.
பின்னர் அரசு சம்பந்தபட்ட ஆணைகளை வழங்கி முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் ஹமாக்ஸ் லைட் உள்ளிட்ட பல பணிகள் நடைபெறவேண்டியது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், கண்காணிப்பாளர் குருவையா, நகா்நல அலுவலர் வினோத்ராஜா, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, குழாய் ஆய்வாளர் நிக்சன், திட்ட அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலா்கள் சரவணக்குமார், விஜயகுமார், பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், வைதேகி, அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் முத்துமாாி, முன்னாள் கவுன்சிலர் தவசிவேல், வட்டச்செயலாளர் பிரசாந்த், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், இந்து வியாபாாிகள் சங்க தலைவர் சந்தனராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

