தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று மாலை தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் அவர்களை, அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து நிர்வாகிகள் சால்வை அணிவித்தனர்.


பதிலுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் கௌரவ ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர் அனைவருக்கும் சால்வை அணிவித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் வளர்ச்சிக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து செயற்குழு உறுப்பினர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

