தூத்துக்குடி, அக். 22-
பெருந்தலைவர் மக்கள் கட்சி,
தூத்துக்குடி மாவட்ட செயலாளர்
எஸ்.பி . மாரியப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் பனைமரத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் கள்ளுக்கடைகளை திறந்து விற்பனை செய்யும் முறை நடைமுறையில் வருகிறது. இருந்து
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? இதனால் லட்சக்கணக்கான பனை மரம் ஏறும் விவசாய தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பிழைப்பு தேடி குடும்பத்தோடு வேறு இடங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கோடிக்கணக்கான பனை மரங்களை வெட்டி விறகுக்கு பயன்படுத்துகின்ற நிலையும் உள்ளது. எனவே பனை நல வாரியத்தின் செயல்பாட்டினை துரிதப்படுத்தவும், பனைத் தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும் தமிழ்நாட்டில் கள்ளு கடைகள்
திறக்க அரசு அனுமதிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகிய (நான்) தலைமை தாங்குகிறேன் மாவட்ட தலைவர் வின்சென்ட், மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், அவைத்தலைவரும் வழக்கறிஞருமான இருதயக்குமார், தமிழ்நாடு நாடார் பேரவை வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் தமிழ்நாடு நாடார் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து எழுச்சி உரையாற்றுகிறார் . இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்
பனைத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் எனவும், பொதுமக்கள், பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்கள். என இந்த அறிக்கையில் மாவட்டச் செயலாளர்
எஸ்.பி. மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

