தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமாிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கணேஷ்நகர் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை கபாடி போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பெற்றதற்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.
எஸ்ஏவி பள்ளி சார்ந்த உடற்கல்வி இயக்குனர் முனைவர் குப்புசாமி, பள்ளி மாணவர்கள் ஆறு பேர் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கபாடி விளையாடி முதல் பரிசையும் முதலமைச்சர் கோப்பையையும், தங்கம் பதக்கம், மற்றும் ஒன்பது லட்சம் பரிசுத்தொகை பெற்றமைக்காகவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் உள்பட பலர் உள்ளனர்.

