*தூத்துக்குடி மாவட்டத்தில் GPS பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் பா. மூர்த்தி இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.*
*மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறை வாகனங்களில் முதற்கட்டமாக 7 நான்கு சக்கர நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் 11 இருசக்கர ரோந்து வாகனங்களில் GPS கருவி பொருத்தப்பட்டும், மேலும் குற்ற நிகழ்வுகளை கண்காணிக்கும் 360 டிகிரி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட Eagle Beat காவல் வாகனமும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.*

*அதன்படி GPS கருவி பொருத்தப்பட்ட காவல் வாகனங்கள் நேரடியாக மாவட்ட காவல் அலுவலகம் மூலம் கண்காணிக்கப்பட்டு வாகனத்தின் தற்போதைய ரோந்து மேற்கொள்ளும் இடம் நேரடியாக கண்காணிக்கப்பட்டும், மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஏதேனும் பிரச்சனைகள் அல்லது குற்ற நிகழ்வுகள் நடைபெற்றால் அருகில் உள்ள GPS பொருத்தப்பட்ட காவல் வாகனம் துரிதமாக சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் வரவுள்ள நிலையில் தூத்துக்குடியில் உள்ள முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், மேற்படி 360 டிகிரி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட Eagle Beat காவல் வாகனத்தில் ரோந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.*
*மேற்படி GPS பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட காவல் வாகனங்களை இன்று (19.10.2024) தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா. மூர்த்தி இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.*
*இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C.மதன் இ.கா.ப அவர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.*

