• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

60 வார்டு பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக தகவல் தொிவிக்க மாமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் – மேயர் ஜெகன் பொியசாமி

policeseithitv by policeseithitv
October 16, 2024
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
60 வார்டு பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக தகவல் தொிவிக்க மாமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் – மேயர் ஜெகன் பொியசாமி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

கடந்த ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற ஐந்தாவது குறைதீர்க்கும் முகாமிற்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். இணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார்.
முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி ேபசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஓரு புறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம் முகவாி மாற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அதனடிப்படையில் இந்த முகாமில் கொடுக்கப்படும் ஓவ்வொரு மனுக்களையும் முறையாக பதிவு செய்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே இந்த மண்டலத்தில் ஏற்கனவே நடைபெற்ற 4 கூட்டத்தில் 236 மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில் 204 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 32 மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன. சில வில்லகங்கள், குளறுபடி இருக்கின்றன அதிலும் சில மனுக்கள் சாலை கால்வாய் வசதிகள் கேட்டு வந்துள்ளது. அதையும் முறைப்படுத்தி ஓவ்வொன்றாக செய்து கொடுப்போம் கிழக்கு மண்டலம் பழைய தூத்துக்குடி குறுகலான சந்துக்கள் அதிகம் உள்ளன. அதை கவனத்தில் எடுத்துக்கொள்வோம்.
மற்றப்படி பட்டா பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ், பெயர் பிழைகள் உடனடியாக சாிசெய்ய ஆணை வழங்கியுள்ளோம். வடகிழக்கு பருவமழையை எதிர்காௌ்வதற்கு மாநகராட்சி பகுதியில் 11 வழிதடங்கள் மூலம் மழைநீர் கடலுக்கு செல்லும் வகையில் தூாிதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் கயத்தாறு கடம்பூர் பகுதியிலிருந்து காட்டாற்று வௌ்ளம் 32 கிலோ மீட்டர் வேகத்தில் வந்ததால் சில பாதிப்புகள் ஏற்பட்டது அதையும் தடுக்கும் வகையில் கோரம்பள்ளம் முத்தையாபுரம் முள்ளக்காடு சங்கரபோி, புதுக்கோட்டை உப்பாற்று ஓடை போன்ற வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை சாிசெய்யும் பணியும் நடைபெற்றுள்ளது. இதை தவிர்த்து 60 வார்டு பகுதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகள் கழிவு மண்கள் இருந்தால் உடனடியாக தகவல் தொிவிக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையும் போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதற்கு தயார்நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழையால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் மாநகராட்சி நிா்வாகம் எல்லா வகையிலும் துாிதமான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது என்று பேசினார். பின்னர் முகவாி மாற்றச் சான்றிதழ் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, நகர்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் பாண்டி, மாநகரட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலர்கள் பேபி ஏஞ்சலின், ஜான்சிராணி, எடின்டா, மகேஸ்வாி, மும்தாஜ், மாியகீதா, ராமுஅம்மாள், மெட்டில்டா, சரண்யா, ரெக்ஸ்லின், வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், வட்டப்பிரதிநிதி ஜார்ஜ், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, பாிது பேட்ாிக் ஆலய குருவானர் செல்வின்துரை, தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க செயலாளர் கணேசன், மாநகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜோஸ்பா், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறைத் துணைத் தலைவர் பா.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. 

Next Post

தூத்துக்குடியில் 132 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்  5 பேர் கைது : மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அதிரடி!!

Next Post
தூத்துக்குடியில் 132 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்   5 பேர் கைது : மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அதிரடி!!

தூத்துக்குடியில் 132 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்  5 பேர் கைது : மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அதிரடி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In