தூத்துக்குடி, அக்,11
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வீடுகள், அலுவலகங்கள், கடைகள், தூய்மைப்படுத்தி, மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்து, பூக்கள், பழங்கள் வைத்து, தாங்கள் செய்யும் தொழிலை தெய்வமாக பூஜித்தும், சரவஸ்வதியை பூஜித்தும் வழிபட்டு வருகிறார்கள்.
இந்த நாளில் தங்களது தொழிலுக்குப் பயன்படும் கருவிகள், போன்றவற்றை வைத்து இறைவழிபாடு செய்யப்படுவது வழக்கம் அதன்படி
தூத்துக்குடி தமிழ்ச்சாலை ரோட்டில் அமைந்துள்ள பிரஸ் கிளப் தலைமை அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை விழா இன்று உற்சாகமாகவும் கோலாகலமாக
செய்தியாளர்கள் கொண்டாடினார்கள். இந்த சிறப்பு நிகழ்ச்சியில்
தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், செய்தியாளர்கள் தாங்கள் செய்தி சேகரிக்க பயன்படுத்தும் கேமரா, லோகோ,
பேனா, நோட் பேட் , போன்ற உபகரணங்களை வைத்தும் மற்றும் பலவிதமான பழங்கள், சுண்டல், பொரிகடலை, அவுல் , உள்ளிட்டவற்றை பூஜையில் வைத்து சாமி படங்களுக்கு தீபாராதனையை அர்ச்சகர் காண்பித்து வழிபாடு நடைபெற்றது.


சங்க செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகரும் மூத்த பத்திரிகையாருமான அருண், ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன், மன்ற செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன்,
சரவணபெருமாள், குமார், கண்ணன்
மாரிராஜா, கார்த்திக், முத்துராமன், இருதயராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள்
ஜெயராம்,
மகாராஜன், நீதிராஜன்,
அறிவழகன்
முத்துக்குமார்
வேல்முருகன்
, சையது அலி சித்திக், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

