தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் திருப்பணிக்கு கோவிலின் நிதியில் ரூபாய் நான்கு கோடி-ஐ பெறவேண்டி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆலோசனையின்படி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததில் ரூபாய் நான்கு கோடி நிதியை கோவில் கணக்கில் செலுத்திட மாவட்ட பொறுப்பு நீதிபதி தாண்டவன் உத்திரவிட்டார். திருக்கோவில் சார்பாக அரசு வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார். இதன் காரணமாக கோவில் திருப்பணியை விரைந்து நிறைவேற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து முயற்ச்சி மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன், அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், அறங்காவல் குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர்களை இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா பாராட்டி நன்றி தெரிவித்தார்.

