தூத்துக்குடி, அக்,9
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பேச்சி முத்து ,இவர் கடலோர காவல் படை ஆய்வாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதால். அந்த பணியிடத்திற்கு
தூத்துக்குடி மாவட்ட
தனிப்பிரிவு ஆய்வாளராக உமையொரு பாகம் நியமிக்கப்பட்டார் இவர் நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனிப்பிரிவு ஆய்வாளர்.
உமையொரு பாகம், தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக சில தூத்துக்குடி மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காவல் ஆய்வாளராக பதவி உயர் பெற்றுள்ள நிலையில் உமையொரு பாகம் மீண்டும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டு
நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
உமையொரு பாகம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றிய சமயம் மிகவும் சிறப்புடன் செயல்பட்டதால்
காவல்துறை உயர் அதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். முந்தைய தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து இடம் மாறுதல்
செய்யப்பட்டிருந்த நிலையில்
இந்த தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிடத்திற்கு
பல்வேறு காவல் ஆய்வாளர்கள் மத்தியில் கடும் போட்டிகள் இருந்தன. ஆனால் காவல் துறை உயர் அதிகாரிகள் தனிப்பிரிவு ஆய்வாளர்கள் நியமிக்கும் பொழுது எப்பொழுதுமே சிறப்புடன் செயல்பட கூடிய நபர்கள் யார் என்பதை விசாரித்து தான் தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிடத்திற்கு நியமிப்பது வழக்கம் அதன்படியே
தூத்துக்குடி மாவட்டத்திற்கு
தனிப்பிரிவு
காவல் ஆய்வாளராக
உமையொரு பாகம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மாவட்டத்திலுள்ள எஸ் பி தனிப்பிரிவு காவலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
செய்தி தொகுப்பு
எம்.ஆத்தி முத்து
போலீஸ் செய்தி

