தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறார்.

இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை பார்வையிட்டு மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்தார். உடன் வட்ட செயலாளர் அசோக்குமார், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், மற்றும் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் உடனிருந்தனர்.

