• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற  குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட   251 மனுக்களில் 245 மனுக்களுக்கு உடனடி தீர்வு மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்!!

policeseithitv by policeseithitv
October 9, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்  நடைபெற்ற   குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட    251 மனுக்களில் 245 மனுக்களுக்கு உடனடி தீர்வு  மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, ஆக்,9

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகிணங்க தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மில்லர்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: இந்த மேற்கு மண்டலத்தில் இது 4-வது வாரமாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மண்டலத்தில் 251 மனுக்கள் பெறப்பட்டதில் 245 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதி 6 மனுக்களில் ஆவணங்கள் குறைப்பாடுகள் இருந்ததால், அதை நிறுத்தி வைத்துள்ளோம். குறைகள் தீர்க்கப்பட்டதும் முழுமையாக அந்த மனுக்களுக்கும் தீர்வு காணப்படும். தமிழக முதலமைச்சரின் சீறிய திட்டமான “மக்களுடன் முதல்வர்” ஊராட்சி பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநகராட்சியிலும் பலர் இ-மெயில் மூலம் குறைகளை தெரிவித்து வந்தன. மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள புகார் பெட்டியில் மனுக்கள் மூலமாக குறைகளை தெரிவித்து வந்தனர். இருப்பினும் சில குறைகளை தீர்ப்பதற்கு மண்டல அலுவலகத்திற்குதான் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் ஒவ்வொரு புதன்கிழமையிலும் மண்டல அலுவலகங்களில் சுழற்சி முறையில் நடைபெறுகின்ற குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. குறிப்பாக முதல் கூட்டத்தில் 100 மனுக்களும், இரண்டாவது கூட்டத்தில் 75 மனுக்களும், மூன்றாவது கூட்டத்தில் 51 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இன்று பெறப்படும் மனுக்களில் சொத்து வரி பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். மற்ற மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும். வடகிழக்கு பருவமழையில் எதிர்கொள்ளுவதற்கு பக்கிள் ஓடை 6 கி.மீ தூரம் தூர்வாறும் பணிகளும், உப்பாத்து ஓடை பகுதியில் இதைபோல் தூர்வாறும் பணிகளும் நடைபெறுகின்றன. இந்த மண்டலத்திற்குட்பட்ட பல பகுதிகளில் புதிதாக சாலைகளும், கால்வாய் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவில், பள்ளி, கல்லூரி உள்ள பகுதிகளில் முழுமையாக சாலை பணிகளை செய்துள்ளோம். எல்லா பகுதிகளிலும் முறையாக பணிகள் நடைபெறும் என்று கூறினார். 34வது வார்டு கவுன்சிலரும், பணிநியமனக்குழு உறுப்பினருமான சந்திரபோஸ் அளித்த கோரிக்கை மனுவில் கடந்த மழைக்காலத்தில் எனது வார்டு பகுதியான பசும்பொன் நகர், 3வது மைல், புதுக்குடி, கந்தன்காலனி, ஆசிரியர் காலனி, தபால்தந்தி காலனி, அசோக்நகர், ராஜீவ்நகர், தேவகி நகர் ஆகிய தெருக்கள் முழுவதும் மழை வெள்ளத்தால், சாலைகள், வீடுகள் மழைநீரில் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எனவே மழை நீரானது வடிகாலுக்கு செல்லும் வகையில் மழைக்காலம் வருவதற்குள் ஆய்வு செய்து வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். முகாமில்: பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் மகேந்திரன், மாநகராட்சி சுகாதார நகர் நல அலுவலர் வினோத்ராஜா, ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்தீரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, சரவணகுமார், ராமர், கனகராஜ், விஜயலெட்சுமி, பொன்னப்பன், கந்தசாமி, சீனிவாசன் (எ)ஜாண், வட்ட செயலாளர் சுப்பையா, வட்ட பிரதிநிதி ஜெபகுமார் ரவி, மாற்றுதிறனாளிகள் நலச்சங்க தலைவர் மருதபெருமாள், பி.ஜே.பி.பொய்சொல்லான், போல்பேட்டை பகுதி தி.மு.க பிரதிநிதி ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் 15 வார்டுகளை சேர்ந்த பொதுக்கள் தங்கள் பகுதி குறைகளை மனுக்களாக வழங்கினார்கள்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட  தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக உமையொரு பாகம் பொறுப்பேற்றார். 

Next Post

தூத்துக்குடியில் 2 இடங்களில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post
தூத்துக்குடியில் 2 இடங்களில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடியில் 2 இடங்களில் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான இடத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In