தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள மாறாந்தையில் புதிய சோதனை சாவடியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ரிப்பன் வெட்டி இன்று துவக்கி வைத்து,சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நாட்டு வைத்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பொண்ணிவளவன், காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




