தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல்துறையினர் சார்பாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுண சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார், இப்பேரணியானது பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் ஆலங்குளம் காவல் நிலையத்திலிருந்து துவக்கப்பட்டு ஆலங்குளம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது, மேலும் இப்பேரணியில் ஆலங்குளம் உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், இத்தகைய பேரணி பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்றது.




