தூத்துக்குடி,
அக்,4
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில்
ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 56
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகளை கனிமொழி கருணாநிதி எம்.பி திறந்து வைத்தார் .
சிலுவைப்பட்டியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் வளர்ச்சி ஐஸ்வர்யா வரைவேற்புரையாற்றினார். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி திட்ட உரையாற்றினார்.



இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த
கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஆகியோரை பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்
பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து
3 கோடியை 70 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 56 குடியிருப்புகளை திறந்துவைத்து மரக்கன்றுகளை நட்டி பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி மருத்துவத்துறை கையெடுகளை வெளியிட்டு கனிமொழி எம்பி பேசுகையில் தமிழகத்தில் இதுபோன்ற முகாம்களில் குடியிருந்து வருபவர்களில் புலம் பெயர்ந்த மக்கள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக மறுவாழ்வு முகாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு தமிழக முதலமைச்சர் இதுபோன்ற வீடுகளை தமிழகம் முழுவதும் கட்டிக் கொடுத்தமைக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு முகாமில் இளம்பெண்ணை சந்தித்த போது படி என்று கூறினேன். நான் படித்து என்ன செய்வது என்று திருப்பி கேள்வி கேட்டார். எதற்கு என்றால் புலம் பெயர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். ஆண்கள் பல இடங்களுக்கு வேலைக்கு சென்று அதன் மூலம் தான் வாழ்கிறோம் என்றார். பெண்கள் தொழில் செய்வதற்கு படிப்பும் அவசியம் என்பதை உணர செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் படித்தால் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும் என்று திமுக ஆட்சியில் உத்திரவாதம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த மக்களுக்கு குடியுரிமை பெறுவதற்கு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்பு இல்லாமல் அடுத்த தலைமுறையை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் கலைஞர் ஆட்சியில் மருத்துவ படிப்பிற்கு வழிவகை செய்யப்பட்டது. ஆனால் நீட் தேர்வு மூலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையும் தமிழகம் முதலமைச்சர் உணர்ந்து கொண்டு நாடு கடந்து வந்த மக்களின் நலன் கருதி ஒர் இடத்தில் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்க்கப்பட்டு மாற்று இடத்திற்கு புலம் பெயர்ந்து வரும் போது அவர்களுக்காக சில கவலைகளை மறக்கும் வகையில் நாங்கள் இருக்கிறோம் என்ற அடிப்படையில் தீர்வு கண்ட கெல்த் திட்டம் உருவாக்கப்பட்டது. அது உங்கள் நலன் பாதுகாக்கப்பட்டது. இந்த பிரச்சனையை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு படியாக பாதுகாக்கவும் எதிர்காலத்தில் எல்லோரையும் போல் தகுதியுள்ளவர்களாக வரவேண்டும் என்று தான் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காத மக்களுக்கும் பணியாற்றி வருகிறார் என்று கனிமொழி எம்பி பேசினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் நாசர் பேசுகையில் தமிழக முதலமைச்சர் அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிடைக்க வேண்டும். அதன் மூலம் இந்த நாடும் வளர வேண்டும் என்று பணியாற்றுகின்ற காரணத்தால் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள இதுபோன்ற மறுவாழ்வு குடியிருப்புகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது. என் மனைவி கூட சில சமயங்களில் எங்கள் தலைவர் மகளிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாதம் 1000 உரிமைத் தொகை வழங்கி பேருந்தில் இலவச பயணம் திட்டம் அறிவித்துள்ளார். உங்களுக்கு அது இல்லையே என்று கேலி பேசுகிறார். ஆனால் தமிழகத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி 65 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்ற புள்ளிவிவரம் வரப்பெற்றுள்ளது. ஆனால் பல மாணவர்கள் ஒரு வேளை படிப்புக்கு மட்டும் வருகின்றனர். ஏனென்று கேட்டால் தாய், தந்தையவர்கள் கூலி வேலைக்கு சென்று விடுகிறார்கள். காலை உணவு கிடைக்காத நிலை இருப்பதால் மதிய உணவு சாப்பிடுவதற்கு பள்ளிக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். இதையும் இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள மூப்பத்தி இரண்டாயிரத்தி நூற்றி முப்பத்தி இரண்டு பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 18 இலட்சம் பேருக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து உலகத்திற்கே வழிகாட்டும் முதலமைச்சராக ஸ்டாலின் விளங்குகிறார். இப்படி ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்யும் முதலமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மடிக்கணினி, சைக்கிள் என எல்லாவற்றையுமே வழங்கி எண்ணற்ற சாதனைகளை செய்து வருகிறார் என்று அமைச்சர் நாசர் பேசினார். விழாவில் சண்முகையா எம்எல்எ, மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூர ணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், கோட்டாட்சியர் பிரபு, எஸ்.பி.
அல்பர்ட்ஜான்,
ஏஎஸ்பி. மதன் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தாசில்தார்கள் முரளிதரன், சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சரவண
வேல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மாணிக்கவாசகம், உதவி அலுவலர் மகேஷ்வரி, பொறியாளர் ரவி, மேற்பார்வையாளர் முத்துராமன், திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல்; அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, முன்னாள் ஆவின் சேர்மனும் மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி அமைப்பாளருமான சுரேஷ்குமார், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சேசுராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மைக்கேல்ராஜ், பிலோமின்ராஜ், ராமர், மாநகர திமுக துணைச்செயலாளர் கீதா முருகேசன், சட்டமன்ற தொகுதி உதயநிதி ஸ்டாலின், நற்பணிமன்ற அமைப்பாளர் பாரி, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், கிளைச் செயலாளர்கள் காமராஜ், ரத்தினகுமார், அன்பு, ரமேஷ், வேல்ராஜ், முருகன், சந்திரசேகர், சண்முகத்தாய், கிராம நிர்வாக அலுவலர் அமலதாஸ், சுகாதார ஆய்வாளர் வில்சன், டாக்டர் விக்னேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி லிங்கராஜா, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து மற்றும் கப்பிக்குளம் பாபு, கௌதம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட அரசுத்துறை அலுவலர், பயனாளிகள் கலந்து கொண்டனர். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை இயக்குநர் ரமேஷ் நன்றியுரையாற்றினார்.

