தூத்துக்குடி, அக்,2.
தூத்துக்குடி.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி கிராம சபை கூட்டம் மேலஅழகாபுரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்திற்கு மாப்பிள்ளையூரணி கிராம மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் உள்பட பல பொதுநல அமைப்பைச் சார்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும், நடைபெற்ற சில பணிகளுக்கு ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். ஊராட்சிப் பகுதியில் நடைபெறுகின்ற 100 நாட்கள் வேலை திட்டத்தில் தாங்கள் பாதிக்கப்பட இருப்பதாகவும், பல வசதிகள் இங்கு இல்லாத நிலையில் அவசரகதியாக மாநகராட்சியுடன் இணைப்பதின் மூலம் இந்த கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்படும். இதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சியுடன் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை இணைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் ஏராளமான இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று குரல் கொடுத்தனர். தற்போது நகராட்சி இணைப்பு என்பது தேவையற்றது என பலரும் பேசினார்கள்.
இதற்கு பதிலுரை வழங்கிய ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார்: தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிற்கிணங்க தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படியும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழிகாட்டுதலின்படி நடைபெறுகின்றது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளீர்கள். வளர்ச்சி ஒன்று தான் நமக்கு குறிக்கோள் என்று ஒருமித்தக் கருத்தோடு பணியாற்றுவோம் என்று பேசினார்.
பின்னர் கிராம சபை கூட்டத்தில், மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்க கூடாது, என்ற தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் என பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளும் வேண்டுகோள் வைத்ததன்படி
மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை 2023-2024, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், உப்பாத்து ஓடையில் உள்ள அமலைச்செடிகள், சீனகருவேல மரங்கள் அகற்றுதல், மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை முறையாக விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் ஒருமனதாக பொதுமக்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன.
கிராம சபை கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மேலஅழகாபுரி ஊர்தலைவர் பாலசுந்தரம், வழக்கறிஞர்கள் மாடசாமி, சண்முக சுந்தரராஜ், ஒன்றிய துணைச்செயலாளரும் ஊராட்சிமன்ற உறுப்பினருமான வசந்தகுமாரி, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், கால்நடை உதவி மருத்துவர் பிரவீணா, ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் முத்துராமன், பேச்சியம்மாள், சுகாதார ஆய்வாளர் வில்சன், ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர்கல்லூரி உன்னத் பாரத் அபியன், ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா, செயிண்ட மேரிஸ் கல்லூரி உதவி பேராசிரியர்கள் புளோரா, டயானா லோகா, கிராம நிர்வாக அலுவலர் அமலதாஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சேசுராஜா, சக்திவேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் பொன்ராஜ், மகளிர் கூட்டமைப்பு தலைவி அந்தோணி பிரேமா, செயலாளர் லூர்துபாக்கியம், கிளைச்செயலாளர்கள் காசி, மூர்த்தி, மகாராஜா, ஜெயசீலன், கௌதம் உள்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், காவல்துறையினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என கிராம மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு திரண்டதால் தாளமுத்து நகர் போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எஸ்பி தனிப் பிரிவு ஏட்டு முருகேசன் கலந்து கொண்டார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற தீர்மானம்
ஒருமனதாக பொதுமக்கள் பெரும் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன.

