தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளா் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், உள்ளிட்ட நிர்வாககுழுவைச் சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்்றனர்.
தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருவது குறித்து புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் கோாிக்கை மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சரவணபெருமாள், குமாா், மாாிராஜா, செந்தில்முருகன், இருதயராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

