வள்ளியூர், செப்,27.
பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி
தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.
வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு உருவ சிலை அருகே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி
பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்
தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும், பனைத் தொழிலாளர்கள் விபத்து ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அதற்குள் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி பனைத் தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
இந்த ஆர்ப்பாட்டத்தில்
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவனர் என் ஆர் தனபாலன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பு என் ஆர் தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இந்த நிகழ்ச்சியில்
கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.எம்.
ரமேஷ்குமார்,
மாநில
தலைமை
நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,
தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.பி.
மாரியப்பன், மாவட்ட பொருளாளர்
மில்லை தேவராஜ்,
மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயளாலர் எம்.சிவகுமார்,நெல்லை மாகர தலைவர் துவரம்பதி, பாளை ஒன்றிய தலைவர் இராம சுப்புராஜ்,த்துதுக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குரும்பூர் டேவிட், லிங்க துரை யோசுவா,ஜெயசீலன், பாலா மற்றும் வள்ளியூர் நிர்வாகிகள் இளைஞர்கள்
தொண்டர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு நலன் கருதி போலீஸார்கள் பெரிதளவு
குவிக்கப்பட்டு இருந்தன.

