தூத்துக்குடி, செப்,28
தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026 ஆம் ஆண்டிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தின் முதல் செயற்குழு கூட்டம் தமிழ்ச் சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று காலை 10:35 மணியளவில் நடைபெற்றது.
இன்றைய செயற்குழு கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார்.
இன்றைய கூட்டத்தில் சங்கத்தின் வருங்கால செயல்பாடுகள் குறித்தும், சங்க உறுப்பினர்களுக்கு அரசு சலுகை விலையில் வீட்டுமனை பட்டா கிடைத்திடும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செயலாளர் எடுத்துரைத்தார்

மேலும் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பயன்பெறும் வகையில் விரைவில் பிரஸ் கிளப் சார்பில்
மெகா
கண் சிகிச்சை முகாம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது அதுபோல் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் இருவருக்கு பரிசுத்தொகை சங்கம் சார்பாக வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மாணவருக்கு ரூ.5000, இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 2500 வழங்குவது என்றும், இதேபோல் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் பரிசுத்தொகை முதல் மாணவருக்கு ரூ.5000, இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 2500 வழங்குவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில்
பொருளாளர் ராஜு நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
இன்றைய கூட்டத்தில், துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், கண்ணன், டேவிட் ராஜா, செந்தில் முருகன், முத்துராமன், சரவணபெருமாள், கார்த்திகேயன், ராஜன், இருதயராஜ், குமார்,
மாரிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

