தூத்துக்குடி செப், 27
தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளா் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத்தலைவர் சிதம்பரம், இணை செயலாளர் சதீஷ் சங்க கௌரவ ஆலோசகர் மூத்த பத்திரிகையாளர் எம். ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர் முத்துராமன், ராஜ் டிவி மணிகண்டன்
உள்ளிட்ட நிர்வாககுழு வைச் சேர்ந்தவர்கள்
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில்
சாமிநாதனை நேரில் சந்தித்து பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில்
வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில்
தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. ஆகையால் தாங்கள் ஆனால் தாங்கள் தங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து வீட்டுமனை பட்டா உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென
கோரிக்கை முன்வைத்தன
இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சாமிநாதன் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பத்திரிகையாளர்களின் இந்த சந்திப்பின்
போது தூத்துக்குடி மாவட்ட
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை இதே கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் சந்தித்துள்ள நிலையில்
இன்று செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து
இந்த கோரிக்கை மனு அளித்துள்ளனர். பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை
நிறைவேற்ற
தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் எடுத்து வரும் தொடர் செயல்பாட்டுகளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

