தூத்துக்குடி, செப்,27.
தமிழர் தந்தை” சி.பா.
ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சி.பா.
ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள்
இன்று கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் காயாமொழியில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு அவரது 120வது பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவனருமான
என் ஆர் தனபாலன் தலைமையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர்
எஸ்.பி. மாரியப்பன்,
மாநிலச் செயலாளர் எம். வி.எம். ரமேஷ் குமார், மாநில தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் வைகுண்டராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிவக்குமார், நெல்லை மாநகர தலைவர் துவரம்பதி, பாளை ஒன்றிய தலைவர் இராம சுப்புராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குரும்பூர் டேவிட், லிங்கதுரை, யோசுவா, ஜெயசீலன், பாலா, மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

