• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம்: பெருந்தலைவர்  மக்கள் கட்சி நிறுவனர்  என்.ஆர். தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி!!

policeseithitv by policeseithitv
September 27, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம்:     பெருந்தலைவர்   மக்கள் கட்சி நிறுவனர்   என்.ஆர். தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, செப்,27.

 

திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்ப ட்டது. இதையொட்டி, வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் அவரது குடும்பத்தின் சார்பில் பொங்கல் வைத்து, படையல் படைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் விளக்கு பூஜையும் நடந்தது.

நிகழ்ச்சிகளில் என்.

வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவியும், முன்னாள் திமுக எம்பியுமான ராதிகா செல்வி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அருகில் உள்ள வெங்கடேஷ் பண்ணையாரின் சொந்த கிராமமான மூலக்கரையில் அன்னதானம் நடைபெற்றது. வெங்கடேச பண்ணையார் நற்பணி இயக்கம் சார்பில் வெங்கடேஷ் பண்ணையாரின் ரதம் மூலக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வந்தது.

இந்த ஏற்பாடுகளை என். வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி மன்ற தலைவரும், வெங்கடேஷ் பண்ணையாரின் சகோதரருமான எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், பொதுச் செயலாளர் ஓடை செல்வம், மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவனர். என். ஆர் தனபாலன்

வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம் முன்னிட்டு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்தடைந்தார். இவருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர்

எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் இளைஞர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் சுமார் 10 வாகனங்களிலும், திருநெல்வேலி கன்னியாகுமாரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில்

கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள்

என். ஆர். தனபாலன் தலைமையில்

திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரத்தில்

வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில நிர்வாகி சிவக்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்

எஸ். பி. மாரியப்பன், பொருளாளர் மில்லை தேவராஜ், தருவைக்குளம் சண்முகவேல், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும்

மாநில வக்கீல் அணி அமைப்பாளர் சிலுவை, அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் துணைத் தலைவர் மாநில சிவ செல்வராஜ், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ், ஆறுமுகநேரி நகர நிர்வாகிகள் கிளாட்சன், இசக்கிமுத்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா,

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஆறுமுகநேரி, மூலக்கரை, திருச்செந்தூர், பழையகாயல், தெற்கு ஆத்தூர், முத்தையாபுரம் உட்பட பல இடங்களில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், வியாபாரிகள் சங்கங்களின் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டி.ஐ.ஜி மூர்த்தி மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Previous Post

சாயர்புரம் காவல் உதவி ஆய்வாளர் மீது தூத்துக்குடி எஸ்.பி.யிடம் இளைஞர் பரபரப்பு புகார்

Next Post

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் கலெக்டர் இளம்பகவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Next Post
தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் கலெக்டர் இளம்பகவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் கலெக்டர் இளம்பகவத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In