தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழ ஈரால் கிராமம் ஆர் சி தெரு புதுக்காலனி என்ற முகவரியை சேர்ந்த பாண்டி மகன் திரு முத்துக் கருப்ப சாமியும் அவரது மகன் பாலாஜி கனகவேல் ஆகியோர்18.03.2021 அன்று இரவு 08.30மணி அளவில் தூத்துக்குடி To மதுரை நெடுஞ்சாலையை மேற்படி காலனியின் முன்புறம் கடக்க முயற்சித்தபோது வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டு பலியனார்கள்.
இது சம்பந்தமாக கீழே இறால் பொதுமக்கள் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்றும் அதை தடுக்க உடனடியாக மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இறந்தவர்களின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தார்கள்.
இப்பிரச்சினை சம்பந்தமாக கீழ ஈரால் சமுதாய கூடத்தில் வைத்து நடத்தப்பட்ட சமாதான கூட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு பிரகாஷ் மற்றும் ஆயுதப்படை துணை காவல்கண்காணிப்பாளர் அவர்களால்நடத்தப்பட்டு சுமூகமாக பிரச்சனை முடிக்கப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் எட்டையபுரம் வட்டாட்சியர் திரு. ஐயப்பன் மற்றும் எட்டையபுரம் காவல் ஆய்வாளர் திரு. ஜின்னா பீர் முகமது, மற்றும் NH DGM திரு. சங்கர் மற்றும் ஊ
ர்பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்


