உசிலை,செப்,7
மூக்கையா தேவர் 45-ஆவது
நினைவு நாள் முன்னிட்டு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட அவைத் தலைவர் கோடை ஆனந்த் முன்னிலையில்
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி
நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
அரசியலிலும், பொதுச் சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவரும், கல்விப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான, போற்றுதலுக்குரிய பி.கே. மூக்கையாத் தேவரின் 45-ஆவது நினைவு நாளான 6.9.2024 வெள்ளிக்கிழமை metruy காலை 10.30 மணியளவில் வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகில்
வைக்கப்பட்டிருந்த மூக்கையா தேவர் திருவுருவப்படத்திற்கு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் வதிலைச் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில்
தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள்
திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் R.சதன் வேட்டையன், பழனி, P.கார்த்திக், திண்டுக்கல் மாநகர செயலாளர் D.M.வினோத்ஜி, மாநில தொண்டரணி பொதுச் செயலாளர் N.இனியன் சம்பத், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுச் செயலாளர் தினேஷ் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் பெஞ்சமின், மாவட்ட மாணவரணி பொதுச் செயலாளர் பிரேம், மாவட்ட தொண்டரணி செயலாளர் எபி(எ) எபனேசர் , திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் கோடாங்கிபட்டி சுதாகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ் பாலன், மாவட்ட தொண்டரணி செயலாளர் வினோத் கண்ணன், மாவட்ட தொண்டரணி துணை தலைவர் திரு.வீரபாண்டி,மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய், மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் நாட்ராயன், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் ரங்கேஷ், , கொடைக்கானல் ஒன்றிய செயலாளர் முருகேசன், கொடைக்கானல் நகர செயலாளர் வசிகரன்,.
நகர இளைஞரணி தலைவர் சிவக்குமார், நகர இளைஞரணி செயலாளர் சக்தி, நகர தொண்டரணி துணை தலைவர் டேவிட், மற்றும் நிர்வாகிகள், நவீன், ஜோஸ்வா, வத்தலக்குண்டு ஒன்றிய துணை தலைவர் சுந்தரபாண்டி, வத்தலக்குண்டு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தினேஷ், வத்தலக்குண்டு ஒன்றிய இளைஞரணி சச்சின், வத்தலக்குண்டு ஒன்றிய தொண்டரணி துணை செயலாளர் விக்கி(எ)விக்ரம், ஒன்றிய மாணவரணி செயலாளர் தங்கப்பாண்டி, ஆத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் முரளி, மற்றும் கொடைக்கானல், திண்டுக்கல் மாநகர,
வத்தலக்குண்டு, ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

