தூத்துக்குடி
செப்,7
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.. மேலும், நகரின் பல பகுதிகிளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது..
இந்நிலையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது…. தூத்துக்குடி மாநகர், தமிழ் சாலை ரோட்டில் உள்ள தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் தலைமை அலுவலகத்தில்விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட, தலைவர் A.T.சண்முக சுந்தரம், பொருளாளர் J.ராஜூ, துணைத் தலைவர் A.சிதம்பரம், இணைச் செயலாளர் P.சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பூஜையில் மூத்த செய்தியாளர்கள் M. ஆத்தி முத்து, லட்சுமணன் மற்றும் பிரஸ் கிளப்பின் உறுப்பினர்கள், மாரி ராஜா, M.கண்ணன், இருதயராஜ், மாணிக்கம்,
நீதி ராஜன், மணிகண்டன், சித்திக் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்..

