தூத்துக்குடி, செப்,12.
தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் தேர்வு கடந்த 4ம் தேதி தேர்தல் அதிகாாிகளான சரவணன், சரவணபெருமாள், கார்த்திகேயன், டேவிட்ராஜா, ஜெயராம், பாலகுமாா், ஆகியோர் தலைமையில் தமிழ்ச்
சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
அதில் பிரஸ் கிளப் தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக மோகன்ராஜ், பொருளாளராக ராஜு, துணைத்தலைவராக சிதம்பரம், இணைச்செயலாளராக சதீஷ்குமாா், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனா். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் பதவியேற்பு விழா தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமையன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 5 புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பேசினார்.
இந்த விழாவில் முன்னாள் தலைவர் காதா்மைதீன், முன்னாள் செயலாளர் அண்ணாதுரை, மற்றும் முக்கிய பிரமுகா்கள் பாஜக மாநில ஓபிசி அணி துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் சிவராமன், கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ்கனி, மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வேல்ராஜ், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் சாா்பில் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா
விக்னேஷ், மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், வட்டச்செயலாளர் சொக்கலிங்கம், தேமுதிக மாவட்ட பொருளாளா் விஜயன், வீரபாண்டிய கட்டபொம்மன் பன்பாட்டுக்கழக தலைவர் முருகபூபதி, செயலாளர் செந்தில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவி ஜெயஜோதி, இந்துமுன்னனி நிர்வாகிகள் சிவலிங்கம், சிபு, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்தினர். மேலும் அரசுதுறை அதிகாரிகள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், தொலை பேசி மற்றும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தொிவித்தனர்.




இந்த நிகழ்ச்சியில் பிரஸ்கிளப் மூத்த உறுப்பினர்கள் அருண், ஆத்திமுத்து, லெட்சுமணன், கேப்டன் முத்துராமன்,
கண்ணன்
மாாிராஜா
இசக்கிராஜா
முரளி கணேஷ், தீக்கதிர் குமார்,
, மற்றும்
உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், அகமதுஜான், ஜெகதீஸ்வரன், இருதயராஜ், ராஜன், செந்தில்முருகன், மாணிக்கம், அறிவழகன், மணிகண்டன், ரமேஷ்கண்ணன், அருள்ராஜ், நீதிராஜன், நடராஜன், கார்த்திக்கேயன்,செய்யது அலி சித்திக், சூா்யா, சட்டம் ஒழுங்கு சேகா், ரமேஷ், மற்றும் செய்தியாளர்கள் ராஜாசாலமோன், ராஜேந்திரபூபதி, விஜயகாந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

