திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லைக்குட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 02.05.2021 அன்று நடைபெறவுள்ள மையமான ஜமால் முகமது தன்னாட்சிக் கல்லூரியில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இவ்வாய்வின் போது திருச்சி மாநகர காவல் துணை கமிஷ்னர் பவன்குமார் ரெட்டி மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.




