தூத்துக்குடி.
தூத்துக்குடி அருகே அமைந்துள்ள ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியின் 51வது பெற்றோர் தினவிழா சனிக்கிழமை ராஜகோபாலன் கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கல்வியிலும் கலையிலும் சிறந்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டினார்.
இறைவணக்கத்தோடு இனிதே தொடங்கிய இவ்விழாவில் அனைவரையும் வரவேற்று இனிய பாடல் பாடினர். பரதமும், ஒடிசியும் இணைந்த மாணவிகளின் நடனம் விழாவிற்கு மெருகூட்டியது. மேலும், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
இவ்விழாவில், பள்ளித்தலைவர் பாலு, பள்ளிச் செயலர், பிரேம் சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஸ்பிக் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்; பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவடைந்தது.

