தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுவிற்குட்பட்ட தூத்துக்குடி மாநகர பகுதியான திரேஸ்புரம் சண்முகபுரம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இரு இடங்களில் நடைபெற்றது. பகுதி செயலாளரும் மண்டலத்தலைவருமான நிர்மல்ராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், ஆகியோர் வரவேற்புரையாற்றினாா்கள்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிற்கிணங்க நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் 23 அணிகளை சேர்ந்த பொது உறுப்பினர்கள் எல்லோரும் கலந்து கொண்டு பணியாற்ற வேண்டிய இடமாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2வது முறையாக போட்டியிட்டு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி வெற்றி பெறுவதற்கு களப்பனியாற்றியது நீங்கள் தான் அந்த பணி தொடர்ந்து 2026ல் தொடர வேண்டும். என்பதற்காகத்தான் தளபதியார் ஓராண்டுகளுக்கு முன்பு அதற்கான வியூகங்கள் வகுப்பட்டு பணியாற்ற அறிவுறுத்தியுள்ளாா். திமுக குடும்பத்தை சார்ந்த நாம் தளபதியார் நிர்ணயித்துள்ள 200 தொகுதி இலக்கை கடந்து வெற்றி பெற வேண்டும். 1949ல் அண்ணாவால் தொடங்கப்பட்ட இயக்கம் பவள விழா ஆண்டில் இருக்கிறோம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் ஜாதி அடிப்படையில் இட ஓதுக்கீடு சட்டம் வேலைவாய்ப்பு என அனைத்து தரப்பினருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தி வாழ்வு கொடுத்தது. நம்முடைய இயக்கம் தான். எல்லோரும் சமம் என்ற நிலை தொடர வேண்டும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் உழைக்க வேண்டும் கலைஞாின் மறைவிற்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற முதலமைச்சர் தளபதியார் 7ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த பதவியை ஏற்ற பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தன்னுடைய உழைப்பால் தொடர் வெற்றியை பெற்றுள்ளார். இதே வெற்றி 2026லும் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக தளபதியார் இரண்டாவது முறையாக பதவி ஏற்க வேண்டும். அதற்காகதான் எல்லா பகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. சட்டத்தையே மாற்று வேன் என்று கூறிய மோடியை சட்டப்புத்தகத்தை வணங்கி பதவி ஏற்பதற்கு காரணமாக அமைந்தவர் நம் தளபதியாா். பீஹார் ஆந்திரா முதலமைச்சர் தயவால் மோடி ஆட்சி நடக்கிறது இது நீண்ட காலம் நீடிக்காது. பூத் கமிட்டி முதல் வாக்களார்கள் சேர்ப்பு நீக்கல் வரை முறையாக பணியாற்றுங்கள். இலக்கை நிர்ணயித்து அனைவாிடமும் நடப்பாக பழகி வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும். மக்கள் நம்மோடு இருக்கிறார்கள் அதை பயன்படுத்தி கொள்ள வெண்டும். 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலை காட்டிலும் 2026 தேர்தல் நமக்கு முக்கியம் முதியோர், கல்லூாி மாணவர்கள், மகளிர் உதவித்தொகை என பல சாதனைகளை செய்துள்ளோம். இதை யெல்லாம் வீடு வீடாக எடுத்துச்சென்று பணியாற்றுங்கள் என்று பேசினார்.
மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் முதலமைச்சராக தளபதியார். பணியாற்றுகிறார். தொர்ந்து 25 காலம் முதல்வராக பணியாற்ற வேண்டும் அதற்கான கட்டமமைப்பு அனைத்து பகுதிகளிலும் வலுவாக செய்திட வேண்டும். வாட்சப், பேஸ்புக் மூலம் வரும் தவறான கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் கூட்டணியை தலைவர் பார்த்துக்கொள்வார் மற்ற பணிகளை நாம் செய்ய வேண்டும் என்று பேசினார்.
கூட்டம் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அணி நிா்வாகிகள் வக்கீல் குபோ் இளம்பாிதி, சீனிவாசன், அருண்குமார், பிரபு தங்கம், மாநகர பொருளாளர் அனந்தையா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், சாகுல்ஹமீது, டேனி, டைகர் வினோத், பெல்லா, பிரவீன்குமாா், மாவட்டபிரதிநிதிகள் சக்திவேல், ராஜ்குமார், மீனாட்சி சுந்தரம், கவுன்சிலர்கள் பவாணி, ஜெயசீலி, மெட்டில்டா, மாியகீதா, சரன்யா, பேபி ஏஞ்சலின், மகேஸ்வாி, பாப்பாத்தி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், கருப்பசாமி, டென்சிங், ரவி இளங்கோ, சேகா், அல்பட், சுரேஷ். ரவீச்சந்திரன், தினகரன், சுரேஷ், பொன்ராஜ், மனோ, நிர்வாகிகள் ஜோசப், பிரான்சிஸ், மாியதாஸ், சரவணன், சந்திரகுமார், கதிரவன், இளம்முருகு, சோலையப்பன், ஜேசுராஜா, ேஜாஸ்வா, ஜெயக்குமார், ராஜசேகா், சிவகுமார், உத்திரபாண்டி, மதியழகன், சண்முகையா, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், குருசாமி, பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், இளைஞரணி அமைப்பாளர் எமல்டன், பெருமாள் ேகாவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் பாஸ்கா், மணி , அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ் 2ம்கேட் பகுதியில் உள்ள திமுக படிப்பகம் சேதமடைந்துள்ளதால் புதிதாக கட்டி தரவேண்டும். என்றுஅமைச்சாிடம் திமுகவினர் கோாிக்கை வைத்தனர். உடனடியாக அமைச்சர் கீதாஜீவன் அந்த பணியை உடனடியாக தொடங்கி எனது சொந்தசெலவில் கட்டி தருகிறேன். என்று உறுதியளித்தது மட்டுமின்றி சண்முகபுரம் பகுதியில் நமக்கான இடத்தை விாிவுப்படுத்துங்கள் அதையும் கட்டி தருகிறேன். என்று கூறினார். திமுக தலைவரான முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சில கேள்விகளை கேட்டதற்கு முதலமைச்சாின் பதிலுரையில் நாட்டு நடப்புகளை நன்றாக தொிந்து கொள்ளுங்கள் உண்மையை பேசுங்கள் இதையெல்லாம் கடந்து உங்களுக்கு மூளை இருக்கிறதா என்று முதலமைச்சர் கேள்வி கேட்டதற்கு இன்று வரை முந்திாிகொட்டைகளான ஜெயக்குமார், முனுசாமி,வேலுமணி உள்பட யாரும் பதிலளிக்க வில்லை அவா்களே அவருக்கு மூளை இல்லை என்பதை அவர்களே ஓப்புக்கொண்டு விட்டாா்கள்என்று மாவட்ட பொருளாளர் ரவிந்திரன் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.

