தூத்துக்குடி ஆக.5,
தூத்துக்குடியில் பல்வேறு பணிகள் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி விவிடி சிக்னலில் நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்பட உள்ள மேம்பாலம் குறித்தும், தூத்துக்குடி இரயில்வே மேம்பாலம் அருகில் புதிய அனுகுசாலை அமைப்பது குறித்தும், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் குறித்து பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் ஆய்வு பணி மேற்கொள்ள வருகை தந்த அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோருக்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் பஞ். தலைவருமான சரவணக்குமார் தலைமையில் திமுக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். அதன் பிறகு மாப்பிள்ளையூரணி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலங்கள் மற்றும் சாலை பணிகளை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலுவிடம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் பஞ். தலைவருமான சரவணக்குமார் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூணி ஊராட்சிக்குட்பட்ட பிரதான் சாலை பகுதியான, மக்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய பகுதியாக உள்ள தூத்துக்குடி மாநகராட்சி எல்லை பகுதி (சத்யா திரையாங்கம்) சாலையிலிருந்து தருவைகுளம் ரோடு வரை உள்ள சாலைபகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் செய்யப்படாத நிலையிலும், தரமான சாலைகள் அமைக்கப்படாத நிலையில் சிதிலமடைந்து உள்ளது. மேற்படி பிரதான சாலை பகுதியானது ஆக்கிரமிப்பு அகற்ற செய்யப்படாத நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது. ஆகையால், மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியின் முக்கியமான பிரதான சாலை பகுதியான தூத்துக்குடி மாநகராட்சி எல்லை பகுதி (சத்யா திரையரங்கம்) சாலையிலிருந்து தருவைகுளம் ரோடு வரை உள்ள பிரதான சாலை பகுதிகளில் விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாநகராட்சி எல்லை பகுதி (சத்யா திரையரங்கம்) சாலையிலிருந்து தருவைகுளம் ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றம் செய்து, விரிவாக்கம் செய்யப்பட்ட தரமான சாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்யுமாறும்,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பிரதான சாலை பகுதியான, மக்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய பகுதியாக உள்ள எட்டயாபுரம் ரோடு முதல் மாப்பிள்ளையூரணி புறவழிச்சாலை வழியாக டேவிஸ்புரம் பகுதி வரை உள்ள சாலை பகுதியானது விரிவாக்கம் செய்யப்படாத நிலையில் பல இடங்களில் சேதமடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லாத நிலையில் உள்ளது. இச்சாலை பகுதியில் பள்ளிகள் உள்ளது. இதனால் மாணவ மாணவியர்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய சாலை பகுதியாகவும் மாப்பின்னைபூரணி ஊராட்சி பகுதி பொதுமக்கள் அதிகளவில் உபயோகப்படுத்தக்கூடிய மிக முக்கியமான பிரதான சாலையாகவும் உள்ளதால் மேற்படி சாலை பகுதியினை போர்க்கால அடிப்படையில் விரிவாக்கம் செய்து, அப்பகுதியில் தரமான சாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்யுமாறும்,
தாளமுத்து நகர் பிரதான சாலை பகுதியானது கடந்த பத்து வருடங்களாகவே சரி செய்யப்படாமலும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்படாத நிலையிலும், தரமான சாலைகள் அமைக்கப்படாத நிலையில் சிதிலமடைந்து உள்ளது. மேற்படி பிரதான சாலை பகுதியானது ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்படத நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது. ஆகையால், மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியின் முக்கியமான பிரதான தாளமுத்து நகர் பிரதான சாலை பகுதிகளில் விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள் நலன் கருதி தாளமுத்துநகர் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றம் செய்து, விரிவாக்கம் செய்யப்பட்ட தரமான சாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பொதுமக்களின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்து இருந்தார். மனுவினை பெற்றுக் கொண்ட அமைச்சர் எ.வ மேற்கண்ட கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் டாக்டர்.செல்வராஜ், பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மன்கத் ராம் சர்மா, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார், தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ஆறுமுக நயினார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

