• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2026 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியின் வெற்றியை முதலமைச்சர் ஸ்டாலின் காலடியில் சமர்பிப்போம் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

policeseithitv by policeseithitv
August 31, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
2026 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியின் வெற்றியை முதலமைச்சர் ஸ்டாலின் காலடியில் சமர்பிப்போம் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர தலைவர் ஏசுதாஸ் தலைமையில் மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்: கடந்த 16ம் தேதி தமிழக முதலமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லா பகுதிகளிலும், பொதுக்கூட்டமும், வீடு வீடாக துண்டு பிரசுரமும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை நாம் எல்லா பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் அறிவுரையின்படி செயல்பட்டதால் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றோம். தேர்தல் பயணத்தை சிறப்பாக செய்ய வேண்டும் மற்றவைகளை சிந்திக்க கூடாது. கூடுதல் கவனம் செலுத்தி மெத்தனபோக்கை கைவிட்டு நம்முடைய இலக்கை நோக்கி பயணத்தை மேற்கொள்ள வேண்டும். கலைஞரின் கொள்கைகளை தமிழக முதலமைச்சர் தளபதியார் கடைபிடித்து வருகிறார். 2026 தேர்தலில் 200 தொகுதியை இலக்காக கொண்ட முதலமைச்சரின் உத்தரவை கடந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த வடக்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை 3 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் கூட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும். கவனமாக ஓவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். நாணயம் மற்றும் ஸ்டாம்ப் உள்ளிட்டவைகளை மத்்திய அரசு தான் வௌியிட வேண்டும். தொண்டர்களின் எண்ணத்தை முதலமைச்சர் நிறைவேற்றி யுள்ளார். இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல தொழில்நிறுவனங்கள் வரவுள்ளன. சோலார் சூாிய ஓளி திட்டமும், நிறைவேற்றப்பட்டு தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆதிதிராவிட நலத்துறை மூலம் மானியத்துடன் கூடிய பல கடன்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் பல துறைகளில் சலுகைகள் பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்புதல்வன் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூாியில் சேர்ந்தவுடன் விண்ணப்பித்தவர்களுக்கு 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மக்களோடு மக்களாக பழகி மக்கள் பணியை செய்யுங்கள் திமுக பொதுஉறுப்பினர் கூட்டம் என்பது வயது வித்தியாசமின்றி எல்ேலாரும் கலந்து கொள்ளும் கூட்டமாகும் அதில் ஏற்றத்தாழ்வு ஏதுவும் கிடையாது. 1949ல் அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சி பவளவிழா ஆண்டில் இருக்கிறது. இதனையொட்டி எல்லா பகுதிகளிலும் உள்ள ெகாடிகம்பத்தை புதுப்பித்து புதிய கொடியை பட்டொலி வீசி பறக்கவிட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளை யும் மாவட்ட கழகம் சார்பில் செய்யப்படும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பலர் எம்.எல்.ஏ தேர்தலில் வாக்களித்தேன் எம்.பி தேர்தலில் வாக்கு இல்லை என்ற குளறுபடியும்உள்ளன. வௌியூர் மற்றும் பல்வேறு பணிகளை இந்த காலக்கட்டத்தில் நடைபெறுகின்ற வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு நீக்கங்களை கவனமாக கையாண்டு அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். அதே போல் தலைமை கழகம் உத்தரவிற்கிணங்க கட்சி அமைப்பு ாீதியாக வார்டு பகுதிகளில் பொறுப்பில் இருந்து அது காலியாகி இருந்தால் அது முறையாக நிரப்பப்படும் திமுக என்பது பொிய கட்சி அதன் வாக்குகள் இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். பட்டி தொட்டி எங்கும் உதயசூாியன் உதிக்க வேண்டும். ஓவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம் ஓரு தொண்டருக்கு துயரம் என்றால் அந்த பகுதியில் உள்ள அனைவரும் அதில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய ஆட்சிதான் இருக்கிறது. இந்த ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டும். முதலமைச்சர் கூறியது போல் 2026 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சாின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கென்று கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் 425 கோடிமதிப்பில் பல்ேவறு வளர்ச்சி பணிகள் மேற்காௌ்ளப்பட்டுள்ளன. அந்த பணிகளும் தொடரும் நாம் வெற்றி பெற முழுமையாக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் 2026ல் புதியதாக கட்சியை தொடங்கி களத்திற்கு வருபவா்களால் ஓட்டு வாங்கவும் முடியாது வெற்றி பெறவும் முடியாது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனாபோன்ற பல்ேவறு இடையூறுகளை கடந்து தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓவ்வொரு தொகுதிக்கும் என்ன தேவை என்பதை அறிந்து ஜாதி மதத்தை கடந்து பணி செய்து வருகிறார். எம்.பி தேர்தலில் 40க்கும் 40 வெற்றி பெற்றோம் பல தொகுதிகளில் எதிர்கட்சிகளுக்கு டெபாசிட் பறிபோனது. முதியர்கள் இளைஞர்கள் இனைந்து திமுக வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும். கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். எத்தனை அணி வந்தாலும் நாம் அனைவரும் ஓற்றுமையாக பணியாற்றி எல்லோரும் சமமாக இருந்து ஒவ்வொருவரும் 100 வாக்குகளை சோ்க்க வேண்டும். இன்னும்ஓரு வருட காலத்தில் ேதர்தலை சந்திக்கும் நிலை வரும் போது நம்முடைய கட்டமைப்புகளின் படி முதலமைச்சர் ஸ்டாலின் 25 வருடம் திமுக ஆட்சி இருக்க வேண்டும் என்ற நிலைதான் வரும் தற்போது பல இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இனி எந்த இடைத்தேர்தல் நடந்தாலும் எந்த எதிர்கட்சியும் போட்டியிட வராத நிலையை நாம் உருவாக்கி காட்ட வேண்டும். என்று பேசினார்.

ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு எந்த வித நிதியும் கொடுக்காமல் வஞ்சித்த போதும், தமிழகம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் பெருகி, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தூத்துக்குடி மாநகரத்திற்குட்பட்ட அனைத்து பகுதி வட்டக்கழகங்களிலும் பொதுஉறுப்பினர்கள் கூட்டம் நடத்துவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காக தூத்துக்குடியில் 990 கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 14000 கோடி முதலீட்டில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை, என பல திட்டங்கள் தந்த முதலமைச்சர் 36000 கோடி மதிப்பீல் பசுமை நைட்ரஜன், பசுமை அம்மோனியா உற்பத்தி செய்யும் செம்கார்ப் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி தங்கம், இராஜா, தலைமை பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் குபேர் இளம்பருதி, அபிராமிநாதன், ரமேஷ், சீனிவாசன், கவிதாதேவி, அருண்குமார், தங்கம், பிரபு, நாகராஜன், அருணாதேவி, பார்வதி, செல்வி, அந்தோணி கண்ணன், பெனில்டஸ், நிக்கோலாஸ்மணி, கோகுல்நாத், ராமர், சின்னத்துரை, சோமநாதன், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரவிந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், செல்வகுமார், சேர்மபாண்டியன், ராஜ்குமார், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜேக்கப், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, டேனி, பரமசிவம், முருகஇசக்கி, மகேஸ்வரன்சிங், ராபின், ரவி, சங்கரநாராயணன், சீதாலட்சுமி, செந்தில்குமார், கருப்பசாமி, சாரதி, சக்திவேல், சீத்தாராமன், பெல்லா, பிக்கப் தனபால், நாராயணவடிவு, ராமச்சந்திரன், சாகுல்ஹமீது, ரூபராஜா, பால்ராஜ், அற்புதராஜ், செல்வலட்சுமி, மணிகண்டன், சத்யா, டைகர் வினோத், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, சுப்புலெட்சுமி, பவானி, நாகேஸ்வரி, ஜெயசீலி, விஜயலெட்சுமி, விஜயகுமார், பட்சிராஜ், இசக்கிராஜா, ஜான், சுதா, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, பொன்னப்பன், தெய்வேந்திரன், சரண்யா, பேபி ஏஞ்சலின், ரெக்ஸின், கண்ணன், வட்டச்செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, ரவிந்திரன், பத்மாவதி, முனியசாமி, சதிஷ்குமார், அசோக்குமார், தினகா், கருப்பசாமி, டென்சிங், முத்துராஜா, பாலகுருசாமி, செல்வராஜ், சுரேஷ், பொன்ராஜ், பொன்பெருமாள், மனோ, சேகா், ராஜாமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், மற்றும் கருணா, மணி, அல்பட், கன்னிமாியாள், ரேவதி, டோலி, உள்பட பலர் கலந்து கொண்டனர். திமுக நிர்வாகிகள் இருவர் மறைவுக்கு ஓரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Previous Post

கொடைக்கானலில் துணிகர சம்பவம் : பேரித்தோட்டத்தில் அத்துமீறி ரூ 3 லட்சம் மதிப்பீட்டிலான ஜெனரேட்டர், விவசாய பொருட்கள் திருட்டு : குற்றவாளிகளுக்கு போலீசார் வலை வீச்சு!! பரபரப்பு..

Next Post

தூத்துக்குடி டவுன் காவல் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராவை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Next Post
தூத்துக்குடி டவுன் காவல் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராவை எஸ்பி ஆல்பர்ட் ஜான்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி டவுன் காவல் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராவை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In