கொடைக்கானல், அக,30
கொடைக்கானலில் பேரித்தோட்டத்தில் அத்துமீறி பூட்டை உடைத்து சுமார் ரூ3 லட்சம் மதிப்பீட்டிலான ஜெனரேட்டர் மற்றும் மருந்து தெளிக்கும் கருவி உள்ளிட்ட விவசாய பொருட்கள் திருட்டு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, கடந்த 20.08.24ம் தேதி 20.00 மணிக்கு கொடைக்கானல் காவல் நிலைய சார்பு சிறப்பு சார்பு ஆய்வாளர் R.ராஜமுருகன் ஆகிய நான் நிலைய அலுவலில் இருந்த போது, கொடைக்கானல் கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 அவர்களின் Crl.M.P.No: 1046/2024 -ன் உத்தரவுபடி வரப்பெற்ற தபாலை பெற்று அதில் சூர்யா என்பவரின் மனுவை பார்வையிட்டு நடவடிக்கையாக நிலைய குற்ற எண் 310/2024 U/S 447, 427, 379(NP) IPC ஆக வழக்கு பதிவு செய்தேன்.

புகாரின் விபரம் பின்வருமாறு. K.சூர்யா,W/O. S.குமரேசன் 757, ECC ரோடு நாயுடுபுரம் கொடைக்கானல் அவர் அளித்துள்ள புகார் மனுவில்
ஐயா நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என் கணவருடைய அனுபவத்தில் ECC ரோட்டில் மேல் பகுதியில் உள்ள சர்வே எண் 17/4-ல் பேரித்தோட்டம் உள்ளது. மேற்படி தோட்டத்தில் நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். அதில் தகர செட்டு போட்ட வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்ந நிலையில் L.சிவக்குமார் என்பவரும் அவர் அண்ணன் மகனான மணிகண்ட ஸ்ரீதரன் (எ) வினோத் என்பவரும் அந்த இட சம்மந்தமாக பிரச்சனை செய்தார்கள் என் கணவர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து OS 74/22 எங்களுக்கு ஆதரவாக injuction வழங்கப்பட்டுள்ளது. மேற்படி நீதிமன்ற உத்தரவானது இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு இருந்த போதும் L.சிவக்குமார் என்பவர் அத்துமீறி எங்கள் நிலத்தில் நுழைந்து வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலுள்ள பொருட்களான (ஜெனரேட்டர் மருந்தடிக்கும் மிஷன் மோட்டார் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பொருட்களையும் அத்தோடு அந்த தகர செட்டையும் உடைத்து தகரம் மற்றும் கம்பிகள்) அனைத்தையும் திருடி சென்று விட்டார்கள். நாங்கள் சென்று (12.02.24 மாலை 4 TO 5 மணி) பார்த்த போது எந்தவித பொருட்களும் அங்கு இல்லை பின்பு CCTV கேமரா ஆய்வில் மேற்படி L.சிவக்குமார் மற்றும் அவரது அண்ணன் மகன் மணிகண்ட ஸ்ரீதரன் (எ) வினோத் மற்றும் ஒரு பத்து நபர்கள் TN 34AB 7543 பிக்கப் வண்டியில் ஏற்றி சென்றுள்ளது பதிவாகியுள்ளது சேதமடைந்த பொருட்களின் மதிப்பு மூன்று இலட்சமாகும் எனவே ஐயா அவர்கள் என்னுடைய கணவரின் சொத்துகள் மீது அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியும் திருடியும் சென்ற நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இணைப்பு CCTV Footage இத்துடன் இணைத்துள்ளேன். என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2அவர்களின் நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கையாக நிலைய குற்ற எண் 310/2024 U/S 447, 427, 379(NP) IPC ஆக வழக்கு பதிவு செய்தார் கொடைக்கானல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா முருகன் அதனை தொடர்ந்து குற்ற வழக்கில் ஈடுபட்ட நபர்களை கொடைக்கானல் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

