• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் தொடர் அதிரடி நடவடிக்கை: 40 கோடி மதிப்பிலான இடங்கள் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் மேயர் பெருமிதம்!!!

policeseithitv by policeseithitv
August 28, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் தொடர் அதிரடி நடவடிக்கை:  40 கோடி மதிப்பிலான இடங்கள் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் மேயர் பெருமிதம்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஒவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்்றினார்.

பிறப்பு இறப்பு சான்றிதழ் முகவாி மாற்றம் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு கட்டடி அனுமதி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மனுக்களை பெற்றுக்கொண்ட பின்

மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் அவரது உத்தரவிற்கிணங்க மழை நீர் தேங்கிய பகுதியில் புதிய கால்வாய் பணிகள் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் ஓவ்வொரு மண்டலம் பகுதியில் நடத்தப்பட்டு இரண்டாவது கட்டமாக இந்த மண்டலத்தில் நடைபெறுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற மண்டலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைக்க பெற்றுள்ளது. அதனடிப்படையில் இந்த பணிகள் தொடர்கின்றன. குறிப்பாக சொத்துவாி குடிதண்ணீர் வகையில் பெயர் மாற்றம் முகவாி மாற்றம் போன்ற குறைபாடுகள் உள்ள மனுக்களுக்கு உடனடியாக இங்கு தீர்வு காணப்படுகிறது. இதுவரை மாநகராட்சி பகுதியில் 2500 புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதியில் புதிய கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் சாலையை பொறுத்தவரை கல்லூாி பள்ளி மருத்துவமனை கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த பணி நடைபெறுகிறது. இங்கு சாலை கால்வாய் போன்றவைகளுக்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை ஆய்வு மேற்கொண்டு அது படிப்படியாக நிறைவேற்றப்படும்.

முத்தையாபுரம் உப்பாற்று ஓடை முழுமையாக ஒருபுறம் 300 மீட்டரும் மறுபுரம் 180 மீட்டரும் அகலம் கொண்டதாகும் அதை முழுமையாக சீரமைத்து மழை காலங்களில் வரும் தேவையற்ற நீரை கடலுக்குள் செல்லும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. அப்பகுதியில்மணல் அாிப்பை தடுப்பதற்கு மரங்கள் நடுவதும் குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ேளாம். அத்திரமரப்பட்டி முள்ளக்காடு பகுதி மக்கள் விடுத்த கோாிக்கையடுத்து ஜேஎஸ்நகாில் ஒரு பூங்கா வரவுள்ளது. அதே போல் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் அதற்கான தேர்வு பணிகள் நடைபெறுகிறது. இந்த பகுதியில் தேவையற்ற இடங்கள் ஏதுவும் இருந்தால் பொதுமக்கள் தகவல் தொிவிக்கலாம் ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் தனியார் வசம் ஆக்கிரமித்து வைத்து இருந்த 40 கோடி மதிப்பிலான இடம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதன்கிழமை தோறும் எல்லா மண்டலங்களிலும் குறைதீா்க்கும் முகாம் நடைபெறும் விடுமுறை நாட்களாக இருந்தால் மட்டும் மறுநாள் வியாழக்கிழமை நடைபெறும் இந்த பகுதியில் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள 153 மனுக்களில் 115 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கட்டிட அனுதிக்கென்று கொடுக்கப்பட்ட 22 மனுக்களில் 9 மனுக்களுக்கு மட்டும் தீர்வு காணப்படாத நிலை யுள்ளது. அதற்கு தகுந்த ஆவணங்களை முறையாக இணைத்து வழங்கினார். அதை முறைப்படுத்தி முறையாக வழங்கப்படும் எந்த பணிகளுக்கும் ரசீது இல்லாமல் யாாிடமும் எதுவும் கொடுக்க வேண்டாம். வீடு கட்டும் போது குடிநீர் இணைப்புகும் விண்ணப்பித்து உடனடியாக இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். அனைத்து பணிகளும் நோ்மையாக நடைபெறுகிறது. என்று பேசினார்.

மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், தொழிற்சங்க செயலாளர் அனல்டேவிட், அளித்த கோாிக்கை மனுவில் பிரையண்ட்நகர் பகுதி கட்டபொம்மன்நகா் நான்கு முக்கு சந்திப்பில் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் போதிய மின்விளக்கு வசதி இல்லாத நிலை இருந்து வருகிறது உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தரவேண்டும் புதிய தார்சாலை போடப்பட்ட இருபகுதிகளிலும் சரல் மண் அடித்து சமப்படுத்த வேண்டும். மழை நீர் வடிகால் அமைத்து தரவேண்டும்் அதே போல் கட்டமொம்மன்நகர் நான்கு முக்கு சந்திப்பில் புதிய தார்சாலை அமைக்கப்பட்ட பின் வேகத்தடை அமைக்கபபடாமல் இருக்கிறது அதை உடனடியாக அமைத்து கொடுத்து விபத்தை தடுக்க வேண்டும். உள்ளிட்ட கோாிக்கையை முன் வைத்து மனு அளித்தனர். பிறப்பு சான்றிதழ் விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு 15 நிமிடத்தில் அச்சான்றிதழை மேயர் ஜெகன் பொியசாமி வழங்கினாா். மற்றொரு பெண் நீண்ட நாள் கோாிக்கையை உடனடியாக தீர்த்து வைக்க உத்தரவிட்டார். இருவரும் மனமகிழ்ச்சியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தொிவித்தனர்.

நிகழ்ச்சியில் இணையா் ராஜாராம், பொறியாளா் சரவணன், உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், கண்காணிப்பு அலுவலர் குருவையா, நகா்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலா்கள் வைதேகி, சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன், வடக்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துைண அமைப்பாளா் விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் நடேசன் டேனியல், பிரசாந்த், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ராபின், மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகர் ராதா கிருஷ்ண பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து போட்டியில் பங்கேற்பு

Next Post

2026ல் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் அறிவித்த 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

Next Post
2026ல் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் அறிவித்த 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

2026ல் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் அறிவித்த 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In