தூத்துக்குடி
கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பெருமாள் ஆலயத்தில் சேவா பாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது
இதையொட்டி குழந்தைகளுக்கான கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் புனைதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 10 மாத குழந்தை முதல் 10 வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து போட்டியில் கலந்து கொண்டனர் இதேபோன்று ஓவிய போட்டியும் நடைபெற்றது
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதை ஏராளமான பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.

